நூற்றுக்கணக்கானவர்களின் உயிர்களை காப்பாற்றி Swiggy, Zomato ஊழியர்கள்.. ஹைதராபாத் இளைஞர் நெகிழ்ச்சி பதிவு!

Swiggy and Zomato Riders Rescue Citizens | ஹைதராபாத்தில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட பொதுமக்களை ஸ்விக்கி, சொமேட்டோ ஊழியர்கள் காப்பாற்றியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

நூற்றுக்கணக்கானவர்களின் உயிர்களை காப்பாற்றி Swiggy, Zomato ஊழியர்கள்.. ஹைதராபாத் இளைஞர் நெகிழ்ச்சி பதிவு!

வைரல் வீடியோ

Updated On: 

19 Sep 2025 12:11 PM

 IST

ஹைதராபாத், செப்டம்பர் 19 : ஹைதரபாத்தை (Hyderabad) சேர்ந்த நபர் ஒருவர் தன்னை மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றியதற்காக ஸ்விக்கி (Swiggy) மற்றும் சொமேட்டோ (Zomato) டெலிவரி ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர்கள் வெறும் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் மட்டுமல்ல, என்னை போன்ற நூற்றக்கணக்கான உயிர்களை காப்பாற்றியவர்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த நபர் தனது பதிவில் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மழை வெள்ளத்தில் சிக்கிய நபரை மீட்ட ஸ்விக்கி, சொமேட்டோ ஊழியர்கள்

தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாலைகளில் மழை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பலர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : ஆசிரியரால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. உடைந்தது மண்டை ஓடு… மருத்துவமனையில் சிகிச்சை!

ஸ்விக்கி, சொமேட்டோவுக்கு நன்றி சொன்ன நபர்

அந்த நபர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ஸ்விக்கி, சொமேடோ உங்களது உணவு டெலிவரி ஊழியர்கள் வெறும் உணவு மட்டும் டெலிவரி செய்யவில்லை. மழை வெள்ளத்தின்போது என்னையும், எனது இருசக்கர வாகனத்தையும் காப்பாற்றினர். என்னை மட்டுமன்றி என்னை போன்று இரவு நேரத்தில் கடுமையான மழையின் போது வீடு திரும்பிய நூற்றுக்கணக்கானவர்களையும் அவர்கள் காப்பாற்றியுள்ளனர் என்று கூறியுள்ளார். அதுமட்டுமன்றி, அந்த பதிவில் டெலிவரி ஊழியரகள் பொதுமக்களை மீட்கும் வீடியோ காட்சிகளையும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : கேரளாவை மிரட்டும் மூளையை தின்னும் அமீபா தொற்று.. இதுவரை 19 பேர் பலி.. தடுப்பது எப்படி?

அந்த நபரின் பதிவு இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் டெலிவரி ஊழியர்களை பாராட்டு கருத்து பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.