அஜித் பவார் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!!
Ajit Pawar Plane crash: மும்பையில் இருந்து 8.15 மணிக்கு புறப்பட்ட சிறிய ரக விமானம் 8.45 மணிக்கு பாராமதியை அடைந்துள்ளது. தொடர்ந்து, அங்கு தரையிறங்க முயன்றபோது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான விமானம்
மகாராஷ்டிரா, ஜனவரி 28: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவரது சொந்த தொகுதியான பாராமதியில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக, அவர் மும்பையில் இருந்து சிறிய ரக விமானத்தில் இன்று காலை புறப்பட்டுச் சென்றுள்ளார். பெரும்பாலான விமான விபத்துக்கள் தரையிரங்கும் போது விபத்தை சந்திக்கும். அப்படியே, அஜித் பவார் பயணித்த அந்த விமானமும் பாராமதியில் தரையிறங்க முயன்ற போது இந்த விபத்தும் நிகழ்ந்துள்ளது. விமானம் தரையிறங்கும்போது பெரும் சப்தம் கேட்டதாகவும், ஓடு பாதையில் இருந்து விலகிச் சென்று வெடித்து சிதறியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மரணம்.. இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி!
தொழில்நுட்ப கோளாறால் விபத்து:
#WATCH | A plane crash reported in Baramati, Maharashtra. More details awaited.
Visuals from the spot. pic.twitter.com/xkx0vtY5cp
— ANI (@ANI) January 28, 2026
மும்பையில் இருந்து 8.15 மணிக்கு புறப்பட்ட சிறிய ரக விமானம் 8.45 மணிக்கு பாராமதியை அடைந்துள்ளது. தொடர்ந்து, அங்கு தரையிறங்க முயன்றபோது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) தகவல்படி, VSR நிறுவனத்திற்குச் சொந்தமான லியர்ஜெட் 45 (Learjet 45) பதிவு எண் VT-SSK என்ற விமானம், காலை 8.45 மணியளவில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளனர்.
விமானம் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி:
சம்பவ இடத்தில் இருந்த உள்ளூர் கிராமவாசி ஒருவர், விபத்தை தான் நேரில் பார்த்ததாகவும், விமானம் கீழே இறங்கியபோதே, அது விபத்துக்குள்ளாகிவிடும் என்று தோன்றியதாகவும், அப்படியே நடந்துவிட்டதாகவும் வேதனை தெரிவித்தார். தொடர்ந்து, விமானம் விழுந்து இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, அது தீப்பிடித்து எரிந்துக்கொண்டிருந்தது. கிராம மக்கள் அதிகளவில் விபத்து பகுதியில் குவிந்தனர். அவர்கள் விமானத்திற்குள் சிக்கயவர்களை வெளியே மீட்க போராடினார்கள். ஆனால், பெருமளவில் தீ எரிந்ததால், அருகில் செல்ல முடியவில்லை என்றார்.
தொடர்ந்து, தீ சற்று அடங்கியநிலையில், உள்ளூர் மக்களே விமானத்தில் இருந்தவர்களை மீட்டுள்ளனர். தொடர்ந்து, விபத்து குறித்து தகவறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், போலீசார், மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு, அஜித் பவார் உள்பட காயமடைந்தவர்களை மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர்.
2023ல் விபத்துக்குள்ளான விமானம்:
இன்று காலை விபத்தில் அஜித் பவார் உயிரிழந்த அந்த விமானம், 2023-லும் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான லியர்ஜெட் 45XR விமானம், 14 செப்டம்பர் 2023ல், மும்பை விமான நிலையத்தில் கனமழைக்கு மத்தியில் தரையிறங்க முயன்றபோது, அந்தத் தனியார் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.