மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் ‘பிச்சைக்காரர்கள் இல்லா நகரம்’ என்ற நோக்கில் அரசின் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது தெருவோரத்தில் பிச்சை எடுப்பவர் போல தோற்றமளித்த ஒருவர், உண்மையில் கோடீஸ்வரர் என்பது தெரியவந்துள்ளது. இந்தூரின் பிரபலமான சரஃபா பஜார் பகுதியில் பல ஆண்டுகளாக காணப்பட்டவர் மங்கிலால். அவர் நேரடியாக யாரிடமும் பிச்சை கேட்பதில்லை. அவரை பார்த்து பரிதாபப்பட்ட மக்கள், தினமும் பணத்தை அவரது கையில் வைத்து செல்வது வழக்கம். சமீபத்தில், மத்தியப் பிரதேச பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில், அவரை மீட்டு மறுவாழ்வு அளிக்க முயன்றபோது, அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவந்தன.