31வது மாடியில் இருந்து கீழே விழுந்த இளம் என்ஜினீயர்.. பரிதாபமாக பலியான சோகம்!

Ghaziabad Engineer Falls From 31st Floor | உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளம் என்ஜினீயர் ஒருவர் தனது நண்பர் மற்றும் விற்பனையாளர் ஒருவருடன் விற்பனைக்கு வந்த பிளாட்டை பார்க்க சென்றுள்ளார். அங்கு 31வது மாடியில் இருந்து விழுந்து அவர் உயிரிழந்துள்ளார்.

31வது மாடியில் இருந்து கீழே விழுந்த இளம் என்ஜினீயர்.. பரிதாபமாக பலியான சோகம்!

மாதிரி புகைப்படம்

Published: 

14 Oct 2025 08:50 AM

 IST

லக்னோ, அக்டோபர் 14 : உத்தர பிரதேசத்தில் (UP – Uttar Pradesh) அடுக்குமாடி குடியிருப்பின் 31வது மாடியில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விற்பனைக்கு வந்த பிளாட் ஒன்றினை அவர் பார்வையிடுவதற்காக சென்றிருந்தபோது அவருக்கு இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், 31வது மாடியில் இருந்து என்ஜினீயர் கீழே விழுந்து பலியானது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

31வது மாடியில் இருந்து கீழே விழுந்த என்ஜினீயர்

உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் நகரின் இந்திரபுரம் பகுதியில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அக்டோபர் 12, 2025 அன்று நள்ளிரவில் சத்தியம்  திரிபாதி என்ற 27 வயது என்ஜினீயர் ஒருவர் தனது நண்பர் ஹர்திங் மற்றும் கட்டட விற்பனையாளர் ஆகியோருடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு சென்றுள்ளார். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட் விலைக்கு வந்த நிலையில், அதனை பார்வையிடுவதற்காக அவர்கள் அங்கு சென்றுள்ளனர்.

இதையும் படிங்க : தன் பேக்கரியில் திருடிய நபருக்கு விருது.. இப்படியும் ஒரு உரிமையாளர்!

பரிதாபமாக உயிரிழந்த இளம் என்ஜினீயர்

பிளாட் விற்பனைக்கு வந்தது தொடர்பாக அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற அவர்கள் சுமார் 50 நிமிடங்கள் அங்கேயே இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த என்ஜினீயர் அடுக்குமாடி குடியிருப்பின் 31வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இது குறித்து என்ஜினீயரின் நண்பரான ஹர்திக் சிங் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், என்ஜினீயரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதையும் படிங்க : 4 பிள்ளைகளுடன் தற்கொலை செய்துக்கொண்ட தாய்.. அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு.. பகீர் சம்பவம்!

ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த என்ஜினீயர் தவறுதலாக 31வது மாடியில் இருந்து விழுந்து பலியானாரா அல்லது அவரை யாரேனும் மேலே இருந்து கீழே தள்ளிவிட்டார்களா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிளாட் விற்பனை விவகாரமாக சென்ற என்ஜினீயர் 31வது மாடியில் இருந்து விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.