பெற்ற மகள்களையே பாலியல் வன்கொடுமை செய்த நபர்.. தனது தாயையும் விட்டு வைக்காத கொடூரம்!

Father Misbehaved With His Own Daughters | பெங்களூரில் மஞ்சுநாத் என்ற நபர் தனது 13 மற்றும் 10 வயது மகள்களை பள்ளிக்கு செல்ல விடாமல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தனது தாயிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

பெற்ற மகள்களையே பாலியல் வன்கொடுமை செய்த நபர்.. தனது தாயையும் விட்டு வைக்காத கொடூரம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

06 Dec 2025 07:44 AM

 IST

பெங்களூரு, டிசம்பர் 06 : கர்நாடகா (Karnataka) மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். 45 வயதாகும் இவர் அதே பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 13 மற்றும் 10 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். தாய், மனைவி மற்றும் பெண் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த அவர் தான் பெற்ற மகள்களிடமே தகாத முறையில் நடத்துக்கொண்டுள்ளார்.

பெற்ற மகள்களையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

மஞ்சுநாத் குடி பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி குடித்துவிட்டு வந்து அவர் வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பள்ளிக்கு சென்று வந்த தனது இரண்டு மகள்களையும், அவர் பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார். மஞ்சுநாத் தனது இரண்டு மகள்களையும் வீட்டு சிறையில் அடைத்து கொடுமை படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற அந்த இரண்டு சிறுமிகளும் தங்களது ஆசிரியர்களை சந்தித்து பேசியுள்ளனர்.

இதையும் படிங்க : ஆரத் தழுவி வரவேற்றது முதல் பரிசளித்தது வரை.. ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடியின் ராஜ உபசரிப்பு.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!

சிறுமிகள் கூறிய பகீர் வாக்குமூலம்

தங்களை தங்களது தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வெளியே கூறாமல் இருக்க தங்களை வீட்டில் அடைத்து வைத்ததாகவும் அந்த இரண்டு சிறுமிகளும் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் இந்த விவகாரம் தொடர்பாக கிராம மக்கள் மற்றும் மஞ்சுநாத்தின் தாய் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய், மஞ்சுநாத் தன்னையும் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாக கூறி கதறி அழுதுள்ளார்.

இதையும் படிங்க : இண்டிகோ விமான ரத்து விவகாரம்…ஊழியர்களுக்கு சிஇஓ திடீர் கடிதம்!

இதனை கேட்டு கடும் கோபம் கொண்ட கிராம மக்கள் மஞ்சுநாத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும்  என காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவரை அதிரடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு குறித்து முதன்முறையா மனம் திறந்த கமல்ஹாசன்!
ஸ்மிருதி மந்தானா மற்றும் பலாஷின் திருமணம் - நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சை
முகேஷ் அம்பானி தினமும் ரூ.5 கோடி செலவழித்தால், அவரது சொத்து காலியாக எவ்வளவு நாட்களாகும்?
இனி ரயில்களில் சாதாரண ஸ்லீப்பர் கிளாஸிலும் தலையணை போர்வை கிடைக்கும்