உத்தரகாண்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்!

Continuous Earthquake In Uttarakhand | உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாலை 6 மணிக்கு ஒரு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இரவு 8 மணிக்கு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

20 Apr 2026 23:28 PM

 IST

உத்தரகாண்ட், ஏப்ரல் 20 : உத்தரகாண்டில் (Uttarakhand) இன்று ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டது அந்த பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாலை 6.26 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து இரவு 8.32 மணிக்கு மீண்டும் ஒருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உத்தரகாண்டில் ஏற்பட்ட தொடர் இரண்டு நிலநடுக்கங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

உத்தரகாண்டில் ஒரே நாளில் இரண்டு முறை ஏற்பட்ட கடும் நிலநடுக்கம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று மாலை 6.26 மணிக்கு 2.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் (NCS – National Center For Seismology) கூறியுள்ளது. சுமார் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.060 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 80.023 கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், மாலை 6 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து எந்த வித தகவலும் வெளியாகவில்லை.

2.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

இதையும் படிங்க : ஒடிசாவில் செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா – தொழில்நுட்ப துறையில் மாபெரும் முன்னேற்றம்

இரண்டாவது முறை ஏற்பட்ட நிலநடுக்கம்

மாலையில் 6 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து இரவு 8.32 மணிக்கு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3 ஆக பதிவு செய்யப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

இவ்வாறு ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..