ஜூலை 21 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு..

Parliament Monsoon Session: 2025, ஏப்ரல் 4 ஆம் தேதி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் ஜூலை 21, 2025 அன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜூலை 21 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு..

கோப்பு புகைப்படம்

Updated On: 

03 Jul 2025 07:33 AM

டெல்லி, ஜூலை 3, 2025: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 2025, ஜூலை 21ஆம் தேதி தொடங்கி 2025, ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்ற நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆனது 2025 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் என்பதால் அதற்கு முந்தைய இரண்டு நாட்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாத எனவும் அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மசோதாக்கள் போதிய விவாதம் இன்றி தாக்கல் செய்யப்பட்டதாக எதிர்க் கட்சியினர் தரப்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2025, ஏப்ரல் நான்காம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் காலவரையின்றி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ஜூலை 21 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்:

பின்பு மூன்று மாதம் கழித்து தற்போது 2025 ஜூலை 21 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அளித்த நிலையில் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. முதலில் இந்த மழைக்கால கூட்டத்தொடர் என்பது ஆகஸ்ட் 12ஆம் தேதி முடிவடைய திட்டமிடப்பட்டிருந்தது.

ஒரு மாதம் நடக்கும் கூட்டத்தொடர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு:


ஆனால் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் என்பதால் அதற்கு முந்தைய இரண்டு நாட்கள் (2025 ஆகஸ்ட் 13 மற்றும் 2025 ஆகஸ்ட் 14 ) நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாது காரணத்தால் இந்த கூட்டத்தொடரானது ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிகழ்வின் படி முதல் நாளான 2025 ஜூலை 21ஆம் தேதி பிரதமர் மோடி உரையாற்றி தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து இம்முறை பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், அதன் மீது விவாதங்கள் நடத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், அதாவது 2025 ஜூலை 21ஆம் தேதி தொடங்கக் கூடிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன்ஸ் சிந்தூர், இந்தியா பாகிஸ்தான் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தரப்பில் கேள்விகள் எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது