பட்ஜெட் 2026: குடும்பங்களின் வரிச்சுமையை குறைக்க.. கூட்டு வரி தாக்கல் முறைக்கு ஆதரவு அதிகரிப்பு

Budget 2026: புதிய வரி முறையில் தனிநபர்களுக்கு ரூ. 4 லட்சம் அடிப்படை விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் ஒரே வருமானம் கொண்ட குடும்பங்களில் வேலை செய்யாத துணையின் விலக்கு பயன்படுத்தப்படாததால், அதிக வரிச்சுமை ஏற்படுகிறது. இதை சரிசெய்ய, கூட்டு வரி தாக்கலைத் தேர்வு செய்யும் தம்பதிகளுக்கு அடிப்படை விலக்கு ரூ.8 லட்சமாக இரட்டிப்பாக்க வேண்டும் என ICAI பரிந்துரைத்துள்ளது.

பட்ஜெட் 2026: குடும்பங்களின் வரிச்சுமையை குறைக்க.. கூட்டு வரி தாக்கல் முறைக்கு ஆதரவு அதிகரிப்பு

கோப்பு புகைப்படம்

Published: 

17 Jan 2026 12:57 PM

 IST

ஜனவரி 17, 2026: இந்தியாவின் வருமானவரி அமைப்பில் முக்கிய மாற்றமாக, திருமணமான தம்பதிகளுக்கான கூட்டு வரி தாக்கல் (Joint Taxation) முறையை விருப்பத் தேர்வாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று இந்திய சார்ட்டர்டு கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) மத்திய நிதியமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. தற்போதுள்ள தனிநபர் அடிப்படையிலான வரி முறை, ஒரே வருமானம் கொண்ட குடும்பங்களின் பொருளாதார உண்மைகளை சரியாக பிரதிபலிக்கவில்லை என ICAI தெரிவித்துள்ளது.

அடிப்படை விலக்கு ரூ.8 லட்சமாக அதிகரிக்க கோரிக்கை: 

தற்போது, புதிய வரி முறையில் தனிநபர்களுக்கு ரூ. 4 லட்சம் அடிப்படை விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் ஒரே வருமானம் கொண்ட குடும்பங்களில் வேலை செய்யாத துணையின் விலக்கு பயன்படுத்தப்படாததால், அதிக வரிச்சுமை ஏற்படுகிறது. இதை சரிசெய்ய, கூட்டு வரி தாக்கலைத் தேர்வு செய்யும் தம்பதிகளுக்கு அடிப்படை விலக்கு ரூ.8 லட்சமாக இரட்டிப்பாக்க வேண்டும் என ICAI பரிந்துரைத்துள்ளது.

இந்த முன்மொழிவின் படி, தம்பதிகளின் மொத்த வருமானம் ஒன்றாக மதிப்பீடு செய்யப்படும். 30% உயர்ந்த வரி விகிதம் ரூ. 48 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானத்திற்கு மட்டுமே விதிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், கூட்டு தாக்கலிலும் ஒவ்வொரு சம்பளதாரருக்கும் தனித்தனியாக ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி, போர்ச்சுகல் போன்ற நாடுகளில் கூட்டு வரி தாக்கல் நடைமுறையில் உள்ளது. அதுபோல இந்தியாவிலும், தனிநபர் அல்லது கூட்டு முறை – இரண்டிலும் குறைந்த வரி வரும் முறையை மக்கள் தேர்வு செய்யலாம் என ICAI கூறுகிறது.

CA சுரேஷ் சுரானா முன்மொழிந்துள்ள கூட்டு வரி கட்டமைப்பில்,

  • ரூ.8 லட்சம் வரை – வரி இல்லை

  • ரூ.8–16 லட்சம் – 5%

  • ரூ.16–24 லட்சம் – 10%

  • ரூ.24–32 லட்சம் – 15%

  • ரூ.32–40 லட்சம் – 20%

  • ரூ.40–48 லட்சம் – 25%

  • ரூ.48 லட்சத்திற்கு மேல் – 30%

இந்த முறையால் ஒரே வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அதிக பயன் கிடைக்கும். நடுத்தர வருமானம் கொண்ட இரட்டை வருமான குடும்பங்களுக்கும் சலுகைகள் கிடைக்கலாம். ஆனால் அதிக வருமானம் கொண்ட தம்பதிகள், கூட்டு முறையில் அதிக வரி வருமா என்பதை கணக்கிட்டு முடிவு எடுக்க வேண்டும்.

வரி அமைப்பு PAN, TDS போன்ற தனிநபர் அடிப்படையில் இயங்குவதால், இந்த மாற்றத்திற்கு தொழில்நுட்ப மற்றும் நிர்வாக சவால்கள் இருப்பதாகவும் ICAI எச்சரித்துள்ளது. இருப்பினும், குடும்பத்தை ஒரு பொருளாதார அலகாக ஏற்றுக்கொள்ளும் இந்த மாற்றம், இந்திய வரி அமைப்பில் முக்கிய சீர்திருத்தமாக அமையக்கூடும்.

‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..
51 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டு சம்பவம்.. விடுதலை செய்யப்பட்ட நபர்..
பணம் பற்றாக்குறை காரணமாக காப்பீட்டு பிரீமியம் செலுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இதை செய்தால் போதும்..
"சொமேட்டோவில் நடக்கும் மோசடி சம்பவங்களை பகிர்ந்த சிஇஓ".. எச்சரிக்கை மக்களே!!