20 நாட்களுக்கு பிறகு… இந்தியாவிடம் ஒப்படைக்க ராணுவ வீரர்.. வாகா எல்லையில் பாகிஸ்தான் செய்த செயல்!
BSF Jawan Purnam kumar Shaw : Rஎல்லை தாண்டி சென்றதாக பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய ராணுவ வீரர் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷா, 20 நாட்களுக்கு பிறகு, அட்டாரி வாகா எல்லையில் இந்தியா ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறார்.

டெல்லி, மே 14 : எல்லை தாண்டி சென்றதாக பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய ராணுவ வீரர் பூர்ணம் குமார் ஷா (BSF Jawan Purnam Kumar Shaw), 20 நாட்களுக்கு பிறகு இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பூர்ணம் குமார் ஷாவை அட்டாரி வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைத்துள்ளது. 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மர் பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை இந்தியா தீவிரமாக எல்லையில் ராணுவ வீரர்களை குவித்தது. மேலும், இருநாடுகளுக்கு இடையே அறிவிக்கப்படாத போர் பதற்றம் நிலவியது. இருநாடுகளும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
இந்தியா எல்லைக்குள் வந்த ராணுவ வீரர்
மூன்று நாட்களுக்கு பிறகு, இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் தணிந்துள்ளது. போர் பதற்றம் தணிந்தாலும், பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் பிடிபட்ட இந்திய ராணுவ வீரர், சொந்த நாட்டிற்கு திரும்பவில்லை. அதாவது, 2025 ஏப்ரல் 23ஆம் தேதி எல்லையை தாண்டியை அடுத்து, ராணுவ வீரர் பூர்ணம் குமார் ஷா, பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிபட்டார்.
இதனால், அவரை விடுவிக்க இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அப்போது, இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் உச்சக்கட்டத்தில் இருந்ததால், அவரை பாகிஸ்தான் விடுவிக்கவில்லை. ராணுவ வீரர் பூர்ணமின் குடும்பமும் இந்தியாவிடம் முறையிட்டது. அவரது மனைவி 7 மாத கர்ப்பிணியும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
இருப்பினும், பாகிஸ்தான் ராணுவ வீரரை விடுவிக்கவில்லை. தற்போது போர் பதற்றம் தணிந்ததை அடுத்து, பாகிஸ்தான் ராணுவம், ராணுவ வீரர் பூர்ணமை விடுவித்துள்ளது. அட்டாரி வாகா எல்லையில் இந்தியா ராணுவத்திடம் பூர்ணம் ஒப்படைக்கப்பட்டார்.
பாகிஸ்தான் செய்த செயல்
#WATCH | Punjab: First visuals from Attari Border in Amritsar as BSF jawan Purnam Kumar Shaw returns to India.
Constable Purnam Kumar Shaw had inadvertently crossed over to Pakistan territory, while on operational duty in area of Ferozepur sector on 23rd April 2025 and detained… pic.twitter.com/gTXNq3IT9O
— ANI (@ANI) May 14, 2025
இதுகுறித்து பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று காலை 10.30 மணிக்கு அமிர்தசரஸில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில் பூர்ணம் குமார் ஷா பாகிஸ்தானில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். பூர்ணம் நன்றாக இருக்கிறார்” என்று குறிப்பிட்டு இருந்தது.
பூர்ணம் குமார் ஷா பாகிஸ்தானுக்குள் நுழைந்தபோது தனது சீருடையில் தனது சர்வீஸ் துப்பாக்கியை ஏந்தியிருந்தார். 40 வயதான அவர் பிஎஸ்எஃப்-ல் 17 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். அவர் மேற்கு வங்காளத்தின் ஹூக்ளியைச் சேர்ந்தவர். இந்தநிலையில், 20 நாட்களுக்கு பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர், “அவரைப் பாதுகாப்பாக மீட்டு வருவதற்கு மத்திய அரசு மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்” என்றனர். இதற்கிடையில், ராஜஸ்தானில் எல்லை தாண்டியை பாகிஸ்தான் வீரரையும் இந்திய ராணுவம் பிடித்து வைத்திருந்தது. இந்த நிலையில், அவரையும் இந்தியா ராணுவம் விடுவிடுத்தது குறிப்பிடத்தக்கது.