Ahmedabad Plane Crash: விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ. 1 கோடி.. உதவித்தொகை அறிவித்த டாடா குழுமம்!

Tata Group Compensation: ஏர் இந்தியாவின் அகமதாபாத்-லண்டன் விமானம் AI171 விபத்தில் சிக்கியதால் உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. டாடா குழுமம், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடும், காயமடைந்தோருக்கு சிகிச்சை செலவையும் வழங்கும் என அறிவித்துள்ளது. இந்த விபத்து டாடா குழுமத்தின் நற்பெயரை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ahmedabad Plane Crash: விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ. 1 கோடி.. உதவித்தொகை அறிவித்த டாடா குழுமம்!

விபத்து நடந்த பகுதி - டாடா குழுமம்

Published: 

12 Jun 2025 21:32 PM

அகமதாபாத், ஜூன் 12: ஏர் இந்தியாவின் (Air India) அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லும் AI171 விமானம் விபத்துக்குள்ளானது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தானது டாடா குழுமத்தால் (Tata Group) ஏர் இந்தியாவை கையகப்படுத்தப்பட்டபிறகு நடந்த மிக்கப்பெரிய விமான விபத்தாகும். இதனால், டாடா நிறுவனத்தின் நற்பெயர் மற்றும் நிதி நிலைமைகளில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. முன்னதாக, டாடா குழுமம் மற்றும் டாடா சன்ச் ஆகியவற்றின் தலைவராக இருந்த ரத்தன் டாடா (Ratan Tata), கடந்த 2021ம் ஆண்டு இந்திய அரசிடமிருந்து ஏர் இந்தியாவை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், ஏர் இந்தியா விமானம் 171 விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாடா முழுமம் உதவித்தொகை அறிவித்துள்ளது.

உதவித்தொகை அறிவிப்பு:

விமான விபத்து நடந்த 6 மணிநேரத்திற்கு பிறகு டாடா குழுமம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தது மட்டுமின்றி, உதவித்தொகையையும் அறிவித்துள்ளது. இதனுடன், இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கு துணை நிற்பதாகவும், இந்த நேரத்தில் எங்கள் துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கும், சிகிச்சையில் உள்ளவர்களுக்கும் எங்கள் இரங்கலும் பிராத்தனையும் உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 1 கோடி அறிவிப்பு:

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியாவின் தாய் நிறுவமனான டாடா குழுமம் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவிக்கையில், ”அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடியும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். இதனுடன், அவர்களுக்கு தேவையான அனைத்து கவனிப்பும் உதவியும் வழங்கப்படும். மேலும், பிஜே மெடிக்கல் விடுதியை மீண்டும் கட்டுவதில் நாங்கள் ஒத்துழைப்பை தருவோம். கற்பனை செய்ய முடியாத இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்.” என்று தெரிவித்தார்.

நடந்தது என்ன..?

இன்று அதாவது 2025 ஜூன் 12ம் தேதி மதியம் ஏர் இந்தியா விமானம் லண்டனுக்கு புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட 5 நிமிடங்களில் அது விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட மொத்தம் 242 பேர் பயணித்த நிலையில், ஒருவரை தவிர, பயணித்த அனைவரும் விபத்தில் இறந்தனர். இதில், குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். இது தவிர, விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்த விடுதியில் சில மாணவர்களும் இறந்தனர்.