Air India Crash : விமான விபத்து.. விசாரணை அறிக்கை பல கேள்விகளை எழுப்புகிறது.. ஏர் இந்தியா சுற்றறிக்கை!

Ahmedabad Air India Crash Investigation Report | அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து விசாரணை அறிக்கை அதிக தெளிவும் ஏராளமான கேள்விகளையும் எழுப்பும் விதமாக உள்ளதால ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் தலைமை செயல் அதிகாரி கேம்பல் வில்சன் ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Air India Crash : விமான விபத்து.. விசாரணை அறிக்கை பல கேள்விகளை எழுப்புகிறது.. ஏர் இந்தியா சுற்றறிக்கை!

மாதிரி புகைப்படம்

Updated On: 

15 Jul 2025 15:50 PM

புது டெல்லி, ஜுலை 15 : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து (Ahmedabad Air India Flight Crash) குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் முதற்கட்ட அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், அந்த அறிக்கையில் பல்வேறு கேள்விகள் எழுவதாக ஏர் இந்தியா விமான (Air India) நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா விமான ஊழியரகளுக்கு அதன் தலைமை செயல் அதிகாரி கேம்பல் வில்சன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளது என்ன, ஏர் இந்தியா விமான விபத்து அறிக்கை குறித்து அந்த நிறுவனம் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏர் இந்தியா விமான விபத்து – வெளியான விசாரணை அறிக்கை

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இது குறித்து விசாரணை அறிக்கை வெளியானது. இந்த விசாரணை அறிக்கையில், சில முக்கிய தகவல்கள் இடம் பெற்று இருந்தன. இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏர் இந்தியா, உலகமும், நாடும் எதிர்ப்பார்த்தது போலவே முதற்கட்ட விசாரணை அறிக்கை கூடுதல் தகவல்களை பெற்று வருவதாக கூறியுள்ளது. மேலும், எதிர்ப்பார்த்தது போலவே இந்த அறிக்கை மூலம்  அதிக தெளிவும் ஏராளமான கேள்விகளும் எழுந்துள்ளதாக ஏர் இந்தியா கூறியுள்ளது.

பராமரிப்பு பிரச்னை இல்லை என்பது உறுதியாகியுள்ளது – ஏர் இந்தியா

விபத்துக்குள்ளான விமானம் மற்றும் அதன் என்ஜின்களில் எந்திர கோளாறு, பராமரிப்பு பிரச்சனைகளோ இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. அத்துடன் கட்டாய பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது. எரிபொருள் தளத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. புறப்படும் பயணிகளிலும் எந்த அசாதாரணமும் இல்லை. விமானிகள் தங்கள் கட்டாய பயணத்துக்கு முந்தைய போதை பரிசோதனையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். மேலும் அவர்களின் உடல்நிலை குறித்து எந்த அதிருப்தியும் இல்லை. விபத்து தொடர்பான விரிவான மற்றும் முழுமையான விசாரணைக்காக விசாரணை குழுவினருக்கு நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம். கடந்த 30 நாட்களுக்கும் மேலாக ஏராளமான குற்றச்சாட்டுகள், புரளிகள் மற்றும் பரபரப்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. இவை அனைத்தும் ஆதாரம் இல்லாமல் போய்விட்டது என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க : ஏர் இந்தியா விமான விபத்து நடந்தது எப்படி?.. இதுதான் காரணமா?.. முதல் தகவல் அறிக்கை வெளியீடு!

விசாரணை அறிக்கை கூறுவது என்ன?

ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு அமைப்பு வெளியிட்ட விசாரணை அறிக்கையில், விமானம் மேலே எழும்பிய ஒருசில வினாடிகளுக்குள்ளே அவற்றின் என்ஜின்களுக்கு எரிபொருள் வினியோகம் தடைபட்டதால் அவை செயலிழந்து விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.