அகமதாபாத் விமான விபத்து.. எந்த சீட் பாதுகாப்பானது? எங்கு அமர்ந்தால் உயிர் பிழைக்கலாம்?

Ahmedabad Flight Crash : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். எனவே, விமானத்தில் எந்த இருக்கை பாதுகாப்பானது போன்ற விவரங்களை பார்ப்போம்.

அகமதாபாத் விமான விபத்து.. எந்த  சீட் பாதுகாப்பானது? எங்கு அமர்ந்தால் உயிர் பிழைக்கலாம்?

விமான விபத்து

Updated On: 

13 Jun 2025 09:15 AM

டெல்லி, ஜூன் 13 : அகமதாபாத்தில் நடந்த விமான (Ahmedabad Flight Crash) விபத்து ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கி இருக்கிறது. இதில் பயணித்த 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். இந்த நிலையில், விமானத்தில் எந்த இருக்கை பாதுகாப்பானது (Safest Seat In Plane) என்ற விவரங்களை பார்ப்போம்.  அதாவது, விமானத்தில் பின்இருக்கை பாதுகாப்பானது ஆய்வுகளில் சொல்லப்பட்டுள்ளது. பொதுவாகவே விமான பயணம் மிகவும் பாதுகாப்பானது. சாலை பயணம், ரயில் பயணத்தை ஒப்பிடுகையில், விமான பயணம் மிகவும் பாதுகாப்பானது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இருப்பினும், விமான விபத்துகள் பேரழிவை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில், மற்ற விபத்துகளை காட்டிலும் விமான விபத்துகளில் உயிரிழப்பு குறைவாக இருக்கும் என சொல்லப்படுகிறது.  எனவே, விமானத்தில் எந்த இருக்கையில் அமருவது பாதுகாப்பானது.. எந்த இருக்கையில்  அமர்ந்தால் ஆபத்தானது என்ற விவரங்களை பார்ப்போம்.

விமானத்தில் எந்த சீட் பாதுகாப்பானது?

விமானத்தில் எந்த இருக்கை பாதுகாப்பானது, எந்த இருக்கை உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் கண்டறிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆராய்ச்சியில், உலகம் முழுவதும் நடந்த 105 விமான விபத்துகளை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். அந்த விமான விபத்துகளில் இருந்து தப்பியவர்கள் பற்றிய தகவல்களை அவர்கள் சேகரித்தனர்.

இந்த ஆய்வில், விமானத்தில் பின்புறம் இருக்கும் இருக்கைகள் பாதுகாப்பானவை என கூறப்பட்டுள்ளது. பின்புறத்தில் அமர்ந்திருக்கும் பயணிகள் மற்ற பகுதிகளில் இருக்கும் பயணிகளை விட உயிர் பிழைக்க 40 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பின்புறப் பகுதியில் உள்ள நடு இருக்கைகள் பாதுகாப்பானவை என்றும் இறப்பு 28 சதவீதம் வரை குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானத்தின் முன்பகுதி மிகவும் ஆபத்தானவை என கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, விமானம் தரையிறங்கும் போதோ, ஓடுபாதையில் விபத்து ஏற்படும்போதோ முன்பகுதி தான் அதிகம் பாதிக்கப்படும் என்பதால், முன் இருக்கையில் அமர்வது பாதுகாப்பற்றது என்று ஆய்வில் கூறப்படுகிறது.

அவசர கால கதவுகளுக்கு அருகே இருக்கும் இருக்கைகள்ளும பாதுகாப்பானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. விமானத்தின் நடுவில் இருக்கைகளுக்கு அருகில் அமர்ந்திப்பவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரிவவந்துள்ளது.  டிவி9 தகவலின்படி, கிரீன்விச் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி அறிக்கையில், அவசரகால வாயிலுக்கு அருகில் அமர்ந்திருக்கும் நபர்கள் விபத்தில் இருந்து தப்பித்து, விமானத்திலிருந்து விரைவாக வெளியேற முடியும் என்றும் இது விபத்தில் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

அகமதாபாத் விமான விபத்து நடந்தது எப்படி?


அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் 2025 ஜூன் 12ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில விமானம் விபத்துக்குள்ளாது.  இந்த விபத்தின்போது, விமானத்தில் 230 பயணிகள், 2 பைலட்டுகள், 10 பணியாளர்கள் இருந்துள்ளனர். இவர்களில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்களுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.