நாட்டின் 15வது துணை ஜனாதிபதி.. சி.பி ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்பு..
Vice President Of India: சி. பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக இன்று அதாவது செப்டம்பர் 12, 2025 தேதியான இன்று பதவி ஏற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

கோப்பு புகைப்படம்
டெல்லி, செப்டம்பர் 12, 2025: 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி, இன்று சி. பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார். நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் உடல்நலக்குறைவு காரணமாக ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நாட்டின் 17வது துணை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றன. இந்த வகையில், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பில் சி. பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்தவர்; அதே சமயம், தமிழகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஆதரவு கோரி மத்திய அமைச்சர்கள், பிற கட்சித் தலைவர்களை அணுகினர். ஆனால், எதிர்கட்சிகள் தரப்பில் அவர் ஆர்எஸ்எஸ் பின்புலத்தைச் சேர்ந்தவர் என்பதனால், தெலங்கானாவைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
துணை ஜனாதிபதிக்கான தேர்தல்:
பின்னர் இருவரும் வேட்பு மனுவை தாக்கல் செய்து, தங்களது தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டனர்; அதாவது, ஆதரவு கோரி கட்சித் தலைவர்களை சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9, 2025 அன்று துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் 452 வாக்குகள் பெற்று, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி. பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
மேலும் படிக்க: குக்கரால் தாக்கி, கழுத்தறுத்து பெண் கொலை – கொள்ளையடித்த வீட்டிலேயே குளித்து சென்ற திருடர்கள் – அதிர்ச்சி சம்பவம்
சி. பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். தேர்தலில் அவர் பெற்ற வெற்றியை, மாநிலங்களவை செயலாளர் பி. சி. மோடி அன்றைய தினமே இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் இந்திய அரசின் சட்டத்துறைக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும் படிக்க: நள்ளிரவில் பிரிட்ஜில் இருந்த பச்சிளம் குழந்தை.. தாய் செய்த செயல்.. அடுத்து நடந்த ஷாக்!
பின்னர், தேர்தல் ஆணைய விதிகளின்படி துணை ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், துணை ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று, அதாவது செப்டம்பர் 12, 2025 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
துணை ஜனாதிபதியாக சி.பி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு:
இதன்படி, தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி வளாகத்தில் காலை 10 மணிக்கு நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக சி. பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்க உள்ளார். இவ்விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள்.