நாய் கடித்து 10 வயது சிறுமி பரிதாப பலி.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்!
Girl Died By Dog Bite | பெங்களூரில் விளையாடிக்கொண்டு இருந்த 10 வயது சிறுமியை தெரு நாய் ஒன்று கடித்து குதறியுள்ளது. இதன் காரணமாக பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்.

மாதிரி புகைப்படம்
பெங்களூரு, ஜனவரி 15 : கர்நாடகா (Karnataka) மாநிலம், பாகல்கோட் மாவட்டம், நவநகர் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அலைனா லோகா என்ற 10 வயது மகள் இருந்துள்ளார். அந்த சிறுமி அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், டிசம்பர் 27, 2025 அன்று சிறுமி தனது வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது தெருநாய் ஒன்று சிறுமியை கடித்த நிலையில், தற்போது சிறுமி பரிதாபமாக பலியாகியுள்ளார்.
விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை கடித்து குதறிய நாய்
சிறுமி விளையாடிக்கொண்டு இருந்தபோது அந்த வழியாக சென்ற நாய் ஒன்று திடீரென சிறுமியின் மீது பாய்ந்து அவரை கடித்து குதற தொடங்கியுள்ளது. இதில் கன்னம், கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்த சிறுமி வலியால் அலறி துடித்துள்ளார். அவரின் சத்தம் கேட்டு வெளியே ஓடிவந்த அவரது பெற்றோர், சிறுமியை நாய் கடித்துக்கொண்டு இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர், நாயை அங்கிருந்து விரட்டி சிறுமியை அவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
இதையும் படிங்க : இந்த பொங்கல் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியை கொண்டு வரட்டும் – தமிழ் மக்களுக்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி
நாய் கடித்ததால் பலத்த காயமடைந்த சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனையில் அவரது பெற்றோர் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மாணவி பாகல்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் சிறுமியை லோகா உப்பள்ளி பகுதியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : டெல்லியில் பிரதமர் மோடி பொங்கல் கொண்டாட்டம்.. சிவகார்த்திகேயன், ரவி பங்கேற்பு!
மருத்துவர்களின் அறிவுரைப்படி சிறுமியை அவரது பெற்றோர் அந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுமி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.