Health Tips: சானிடைசரை அதிகமாக பயன்படுத்தினால் புற்றுநோய் வருமா? பக்கவிளைவுகளை தருமா?
Sanitizer Side Effects: கொரோனா காலத்தின்போது நீங்கள் எங்கிருந்து வந்தாலும், உங்கள் கைகளைக் கழுவி சுத்திகரிக்காமல் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அன்று தொட்டு இன்று வரை வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள், மால்கள் மற்றும் போக்குவரத்தில் இது எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சானிடைசர்
கொரோனா (Corona) காலத்தில் அதிகம் பேசப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட ஒரு விஷயம் கை சுத்திகரிப்பான். கொரோனா காலத்தின்போது நீங்கள் எங்கிருந்து வந்தாலும், உங்கள் கைகளைக் கழுவி சுத்திகரிக்காமல் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அன்று தொட்டு இன்று வரை வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள், மால்கள் மற்றும் போக்குவரத்தில் இது எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழித்து நோய்களிலிருந்து பாதுகாக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால், சமூக வலைதளங்களில் கை சுத்திகரிப்பான் (hand sanitizer) புற்றுநோயையும் ஏற்படுத்தும் என்ற தகவல் பரவுகிறது. இது உண்மையா? பாதுகாப்பானதா உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
கை சுத்திகரிப்பான் பாதுகாப்பானதா..?
உயிரிக்கொல்லி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் எத்தனால், கை சுத்திகரிப்பான்களில் பயன்படுத்தப்பட்டு வருவதால் பலரும் இதுகுறித்து பயம் கொள்கின்றனர். இருப்பினும், WHO இன் கூற்றுப்படி, எத்தனால் கை சுகாதாரத்திற்கு முற்றிலும் பாதுகாப்பானது என்றும், நீண்ட காலமாக பயன்படுத்தினால் கூட எந்தவொரு கடுமையான உடல்நல அபாயங்களையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும், கை சுத்திகரிப்பான் அதிகமாக பயன்படுத்தும்போது சில பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
கை சுத்திகரிப்பானின் பக்கவிளைவுகள்:
தோல் அலற்ஜி:
சுகாதார பாதுகாப்பற்ற இடங்களில் ஆல்கஹால் சார்ந்த கை சுத்திகரிப்பாளரை பயன்படுத்தலாம். இருப்பினும், சிலருக்கு இது தோல் அழற்ஜி அல்லது அரிப்பு பிரச்சனையை ஏற்படுத்தலாம். அதன்படி, சருமத்தில் சிவத்தல், வறட்சி போன்றவைகளுக்கு வழிவகுக்கும்.
கருவுறுதல்:
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் டாக்டர் கிறிஸ் நோரிஸ் கூறுகையில், சில சானிடைசர்களில் ஆல்கஹால் உள்ளது. இவற்றில் உள்ள எத்தில் ஆல்கஹால் ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது. இருப்பினும், சில ஆல்கஹால் அல்லாத சானிடைசர்களும் உள்ளன. அதாவது, ஆல்கஹால் அல்லாத சானிடைசர்கள் ட்ரைக்ளோசன் அல்லது ட்ரைக்ளோகார்பன் போன்ற ஆண்டிபயாடிக் சேர்மங்களை பயன்படுத்துகின்றன. இந்த ட்ரைக்ளோசன் கருவுறுதலில் சில தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.
ஹார்மோன் சமநிலை:
ஆல்கஹால் அல்லாத கை சுத்திகரிப்பான்களில் உள்ள ட்ரைக்ளோசனும் ஹார்மோன் பிரச்சனைகளுக்கு காரணமாக அமையலாம். உடலின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைப்பது கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ALSO READ: தினமும் ஒரு ஸ்பூன் வெள்ளை எள்! எலும்பு முதல் இதயம் வரை வலுப்பெறும் ரகசியம்..!
மேலும் சில..
கை சுத்திகரிப்பான்களை அதிக மணம் கொண்டதாக மாற்ற, பித்தலேட்டுகள் மற்றும் பாராபென்கள் போன்ற நச்சு இரசாயனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. பித்தலேட்டுகள் மனித வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தை சீர்குலைக்கும் நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைக்கும் பொருட்கள் ஆகும். அதேநேரத்தில், பாராபென்கள் நமது ஹார்மோன்கள், கருவுறுதல் மற்றும் இனப்பெருக்க வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும்.