Yogi Babu : கோலமாவு கோகிலா படத்தில் முகத்தில் கால் வைத்த நயன்தாரா.. யோகி பாபு சொன்ன சம்பவம்!
Yogi Babu Praises Nayanthara : தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் யோகி பாபு. இவர் தற்போது சில படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா, தனது முகத்தில் கால் வைக்கும்படி இருக்கும் சீனின் அவர் செய்த விஷயம் குறித்துப் பேசியுள்ளார்.

நயன்தாரா மற்றும் யோகி பாபு
கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் யோகி பாபு (Yogi Babu). இவர் தற்போது சினிமாவில் நகைச்சுவை நடிகர் மற்றும் கதாநாயகன் என இரண்டு வெவ்வேறு பாதைகளில் பயணித்து வருகிறார். சினிமாவில் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், கோலமாவு கோகிலா (Kolamaavu Kokila) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, மற்ற இயக்குநர்களின் திரைப்படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்து வருகிரார். மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக ஏஸ் திரைப்படம் வெளியாகியிருந்தது.
விஜய் சேதுபதியின் முன்னணி நடிப்பில் வெளியான இப்படத்தில், நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு, நயன்தாராவுடன் நடித்த அனுபவம் பற்றியும், நயன்தாராவின் பணிவு பற்றியும் ஓபனாக பேசியிருந்தார். மேலும் அவர் நிஜத்திலும் லேடி சூப்பர் ஸ்டார்தான் எனவும் பெருமையாகப் பேசியுள்ளார். அதுகுறித்து பார்க்கலாம்.
நயன்தாரா குறித்து யோகி பாபு பெருமையாகப் பேசிய விஷயம் :
நடிகர் யோகிபாபு நேர்காணல் ஒன்றில், நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறியிருந்தார். அவர் அதில், ஒரு காட்சியில் நயன்தாரா எனது முகத்தில் கால் வைப்பது போல் ஒரு சீன இருந்தது. முதலில் நயன்தாரா அதற்கு சம்மதிக்கவில்லை. பின் நானும், நெல்சனும்தான் அவரை வற்புறுத்தி நடிக்க வைத்தோம்.
இதையும் படிங்க :விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் நாயகி இவரா?
அந்த காட்சிமட்டும் சுமார் ஏழு அல்லது எட்டு டேக் போனது. ஆனால் நயன்தாரா ஒரு முறை கூட எனது முகத்தில் அவர் காலை வைக்கவில்லை. மேலும் நயன்தாரா எனது முகத்தில் அழுக்கு படக்கூடாது என அவர் அந்த காலை தரையில் கூட ஊணாமல் தூக்கியே வைத்திருந்தார். அதனால்தான் அவர் நிஜத்திலும் லேடி சூப்பர் ஸ்டார் எனக் கூறுகிறேன் என நடிகர் யோகி பாபு வெளிப்படையாகப் பேசியிருந்தார்.
நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் லேட்டஸ்ட் பதிவு :
கோலமாவு கோகிலா திரைப்படம் :
இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் கோலமாவு கோகிலா. இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா முன்னணி நடிகையாக நடிக்க, கதாநாயகனாக யோகிபாபு நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் சரண்யா பொன்வன்னன், ஜாக்குலின் என பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.
இதையும் படிங்க :நான் ஹீரோவா நடிக்கப் போறேனா? இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் விளக்கம்!
போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் உருவாகியிருந்த இப்படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படமானது நயன்தாராவின் முன்னணி நடிப்பில் வெளியாகிய வெற்றி திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.