விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆன பகவதி படம்!

Bagavathi Movie Re Released: நடிகர் விஜய் நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை 68 படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீப காலமாக நடிகர் விஜய் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆன பகவதி படம்!

பகவதி படம்

Published: 

21 Jun 2025 17:42 PM

 IST

நடிகர் விஜய் (Actor Vijay) தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனதில் இருந்தே தொடர்ந்து தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிபோட்டு வைத்துள்ளார் என்றே சொல்லலாம். இதுவரை நடிகர் விஜய் நடிப்பில் 68 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதில் பெரும்பாளான படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் தோல்வியை சந்தித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தம்பி பாசத்தை மையமாக வைத்து வெளியான படம் தான் பகவதி (Bagavathi Movie). இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானபோது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஜயின் பிறந்த நாள் நாளை 22-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது.

இந்த பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஜயின் நடிப்பில் முன்னதாக வெளியான பகவதி படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்தை டிஜிட்டல் 4கே தரத்தில் தயாரித்து தமிழகம் முழுவது சுமார் 50 திரையரங்குகளில் மதன் மூவிஸ் சார்பில் ஜெயராஜ் வெளியிட்டுள்ளார்.

இந்த வாரம் புதிதாக திரையரங்குகளில் நடிகர்கள் தனுஷ் நடிப்பில் குபேரா, நடிகர் அதர்வா நடிப்பில் டிஎன்ஏ, நடிகர் வைபவ் நடிப்பில் சென்னை சிட்டி கேங்ஸ்டர் ஆகிய படங்கள் வெளியாகி இருந்தாலும் நடிகர் விஜயின் இந்த பகவதி படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று பார்ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

நடிகர் விஜயின் இன்ஸ்டாகிராம் பதிவு:

விஜய் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் பகவதி படம்:

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பகவதி. இதில் நடிகர் விஜயின் நாயகியாக நடிகை ரீமாசென் நடித்து இருந்தார். மேலும் நடிகர் விஜயின் தம்பியாக நடிகர் ஜெய் நடித்து இருந்தார். இவர் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் வெங்கடேசன் எழுதி இயக்கி இருந்த இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் வடிவேலு, ஆஷிஷ் வித்யார்த்தி, கே.விஸ்வநாத், யுகேந்திரன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். தனது தம்பி ஜெய்யை கொலை செய்த ஆஷிஷ் வித்யர்த்தியை பழிவாங்க சாதாரன டீ கடைக்காரகாக இருக்கும் விஜய் பெரிய கேங்ஸ்டராக மாறுவதே படத்தின் கதை.

இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் ரீ ரிலீஸாகி வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் முன்னதாக விஜயின் நடிப்பில் வெளியான கில்லி, சச்சின் ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.