Vetrimaaran : ‘மனுஷி’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுப்பு.. இயக்குநர் வெற்றிமாறன் வழக்கு!

Vetrimaaran Manushi Film Censor Certificate Issue : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் வெற்றிமாறன். இயக்குவதைத் தொடர்ந்து படங்களைத் தயாரித்தது வரும் , இவரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மனுஷி. இந்த படத்திற்கு சென்சார் போர்ட் சான்றிதழை வழங்க மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், வெற்றிமாறன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Vetrimaaran : மனுஷி படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுப்பு.. இயக்குநர் வெற்றிமாறன் வழக்கு!

வெற்றிமாறனின் மனுஷி படம்

Published: 

02 Jun 2025 20:59 PM

இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaarn) இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் விடுதலை 2 (Viduthalai 2).  இந்த படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் சூரி இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூர்யாவின் (Suriya)  வாடிவாசல் (Vaadivaasal) படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷனில் பிசியாக இருந்து வருகிறார். இயக்குநர் வெற்றிமாறன் திரைப்படங்களை இயக்குவதைத் தொடர்ந்து, புது முக இயக்குநர்களில் படங்களைத் தயாரித்து வருகிறார். இவரின் தயாரிப்பில் பல வித்தியாசமான கதைகளைக் கொண்ட படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் உருவாகியுள்ள படம் மனுஷி (Manushi). இயக்குநர் கோபி நைனார் (Gopi Nainar) இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா (Andrea Jeremiah) முன்னணி நாயகியாக நடித்துள்ளார்.

இந்த படமானது உருவாகிக் கிட்டத்தட்ட 1 வருடமான நிலையில், படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இயக்குநர் வெற்றிமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுஷி படத்தில் மாநில அரசைப் பற்றி மோசமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், கம்யூனிச கொள்கையைக் குழப்பும் வகையில் படம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்சார் போர்டு இப்படத்திற்கு சான்றிதழை வழங்க மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்குச் சான்றிதழை வழங்க, மனுஷி படத்தை மறு ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று இயக்குநர் வெற்றிமாறன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வெற்றிமாறனின் மனுஷி திரைப்படம் :

 

இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த மனுஷி படத்தை, அறம் பட இயக்குநர் கோபி நைனார் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் முன்னணி நாயகியாக நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா நடித்துள்ளார். அவருடன் நடிகர்கள் நாசர், ஹகீம் ஷாஹ், தமிழ் மற்றும் பாலாஜி சக்தி வேல் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டிலே தயாராகிவிட்டது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லரும் கடந்த 2024ம் ஆண்டிலே வெளியானது. அதைத் தொடர்ந்து, இப்படமானது ரிலீஸாகவிருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது .

மேலும் இப்படமானது இந்த 2025ம் ஆண்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படத்திற்கு இன்னும் சென்சார் போர்டு இன்னும், சென்சார் சான்றிதழை வழங்காத நிலையில், இன்னும் இந்த படத்தின் ரிலீஸ் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.