Maareesan : வடிவேலு – ஃபகத் பாசிலின் ‘மாரீசன்’ – முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது?

Maareesan Movie First Song Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் வடிவேலு. மலையாள இயக்குநரின் இயக்கத்தில் ஃபகத் பாசிலுடன் வடிவேலு இணைந்து நடித்திருக்கும் படம் மாரீசன். தற்போது இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் பற்றிய அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Maareesan : வடிவேலு - ஃபகத் பாசிலின் மாரீசன் - முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது?

மாரீசன் திரைப்படம்

Updated On: 

08 Jul 2025 18:42 PM

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஃபகத் பாசில் (Fahadh Faasil). நடிகர் வடிவேலுவுடன் (Vadivelu) இவர் இணைந்து நடித்திருக்கும் படம் தான் மாரீசன் (Maareesan). இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்தை, மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் (Sudheesh Sankar) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த மாரீசன் படமானது மலையாளம் மற்றும் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை திரைப்படமாக இந்த மாரீசன் படமானது உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்குத் தமிழ் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், படக்குழு இப்படத்தின் முதல் பாடல் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான “FAFA” (FAFA Song)பாடலானது வரும் 2025, ஜூலை 9ம் தேதியில் மாலை 04:05 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது மக்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.

மாரீசன் படக்குழு வெளியிட்ட முதல் பாடல் ரிலீஸ் அறிவிப்பு :

வடிவேலு – ஃபகத் பாசில் கூட்டணி :

நடிகர் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம்தான் மாரீசன். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது.இந்த படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி தயாரித்துள்ளார்.

இதையும் படிங்க :கோலமாவு கோகிலா படத்தில் முகத்தில் கால் வைத்த நயன்தாரா.. யோகி பாபு சொன்ன சம்பவம்!

இந்த படத்தில் நடிகர்கள் வடிவேலு மற்றும் ஃபகத் பாசிலுடன், நடிகர்கள் கோவை சரளா, விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ரேணுகா என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் கோவை சரளா மற்றும் வடிவேலு பல வருடங்களுக்குப் பின் இணைந்துள்ள படமாகவும் இப்படம் அமைந்துள்ளது. இந்த படத்திற்கு முன் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில், மாமன்னன் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க : ’இட்லி கடை’ படத்தின் இசை வெளியீட்டு உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!

இந்த மாரீசன் படமானது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது . குறிப்பாக மலையாள மக்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.