Jana Nayagan : விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தில் ‘பகவந்த் கேசரி’ பட காட்சிகள் இடம் பெறுகிறதா?
Bhagavanth Kesari Scene In Jana Nayagan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தளபதி விஜய். இவரின் முன்னணி நடிப்பில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம்தான் ஜன நாயகன். இந்த படத்தின் ஷூட்டிங் பிரம்மாண்டமாக நடந்துவரும் நிலையில், இந்த படத்தில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தின் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜன நாயகன் மற்றும் பகவந்த் கேசரி
தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) 69வது திரைப்படமாக உருவாகிவருவது ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தை முன்னணி இயக்குநர் ஹெச். வினோத் (H.Vinoth) இயக்கி வருகிறார். இவரின் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தை கேவிஎன் ப்ரொடக்ஷன் (KVN Production) நிறுவனமானது மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படமானது நடிகர் விஜய்யின் இறுதி திரைப்படம் என்ற நிலையில், மாறுபட்ட கதைக்களத்தில் சிறப்பாகத் தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்து வருகிறார். இவர் கடைசியாக நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக ஜன நாயகன் படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் 3 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதை தொடர்ந்து தற்போது ஜன நாயகன் படத்தில் , தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் நடிப்பில் வெளியான, பகவந்த் கேசரி ( Bhagavanth Kesari) படத்தின் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பகவந்த் கேசரி படத்தில் இடம் பெற்ற “குட் டச் பேட் டச்” என்ற காட்சிகள், ஜன நாயகன் படத்தில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜன நாயகன் படத்தில் பகவந்த் கேசரி படக் காட்சிகள் ?
கடந்த 2023ம் ஆண்டு இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்திலும், டோலிவுட் பிரபல நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பிலும் வெளியான படம் பகவந்த் கேசரி. இந்த படமானது தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படமும் பகவந்த் கேசரியின் தமிழ் ரீமேக் என்று கூறப்பட்டது. ஆனால் பட தரப்பில் ஜன நாயகன் ரீமேக் படமா என்று கூறவில்லை. இந்தியா தொடர்ந்து பாலையாவின் பகவந்த் கேசரி படத்தின் “குட் டச் பேட் டச்” என்ற காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கான உரிமையைப் படக்குழு ரூ. 4.5 கோடிகளை கொடுத்து வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விஜய்யின் ஜன நாயகன் படத்தில் அந்த காட்சிகளை ரீமேக் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது, மேலும் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. தற்போது வெளியான இந்த தகவலானது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.
ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
பொங்கலுக்கு வருகிறோம்!
ಸಂಕ್ರಾಂತಿಗೆ ಬರುತ್ತಿದ್ದೇವೆ!
సంక్రాంతికి వస్తున్నాం!
पोंगल पर आ रहे हैं!
പൊങ്കലിന് വരുന്നു!
09.01.2026 ❤️#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju… pic.twitter.com/WIYOpyyQlN
— KVN Productions (@KvnProductions) March 24, 2025
நடிகர் விஜய்யின் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில் இந்த படத்தின் பாடல்கள் விறுவிறுப்பாகி தயாராகிவருகிறதாம். மேலும் இந்த படத்தின் முதல் பாடல் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.