Anil Ravipudi: வித் லவ் படத்தை பார்த்து ரொம்பவே ரசித்தேன் – பகவந்த் கேசரி பட இயக்குநர் பாராட்டு!
Anil Ravipudi praised With Love Movie: தமிழில் பிரபலமான இயக்குநராக இருப்பவர் அபிஷன் ஜீவிந்த். இவர் கதாநாயகனாக நடித்து அறிமுகமாகியுள்ள படம்தான் வித் லவ். இப்படம் கடந்த 2026 பிப்ரவரி 6ம் தேதி முதல் திரைப்டப்பட்ட நிலையில், இப்படத்தை பார்த்த பகவந்த் கேசரி பட இயக்குநர் அனில் ரவிபுடி பாராட்டி விமர்சனம் கொடுத்துள்ளார்.

வித் லவ் படத்தை பாராட்டிய அனில் ரவிபுடி
தெலுங்கு சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் அனில் ரவிபுடி (Anil Ravipudi). இவர் தெலுங்கில் பாலகிருஷ்ணா (Balakrishna) முதல் சிரஞ்சீவி (Chiranjeevi) வரை பல்வேறு பிரபலங்களை கொண்டி மிக பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் இதுவரை தெலுங்கில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கிறது. மேலும் இவர்தான் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி (Bhagavanth Kesari) என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மைய கருவை கொண்டுதான், தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் “மன சங்கர வர பிரசாத் கரு”. இப்படத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர். பேமிலி கதைக்களத்தில் வெளியான இது நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது புது படத்தை இயக்கும் பணிகளிலும் இவர் தீவிரமாக இருக்கிறார்.
அந்த விதத்தில் சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான வித் லவ் (With Love) படத்தை இவர் பார்த்துள்ளார். அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevinth) மற்றும் அனஸ்வரா ராஜன் (Anaswara Rajan) நடித்துள்ள, வித் லவ் படத்தைப் பார்த்த இயக்குநர் அனில் ரவிபுடி அதை பாராட்டி எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘கர’ படத்தின் டப்பிங் பணியை முடித்த தனுஷ்? – இணையத்தில் வைரலாகும் தகவல்!
வித் லவ் படத்தை பாராட்டிய தெலுங்கு இயக்குநர் அனில் ரவிபுடி:
அந்த பதிவில் இயக்குநர் அனில் ரவிபுடி, “வித் லவ் திரைப்படத்தை பார்த்து ரொம்பவே ரசித்தேன். சமீப காலங்களில் மிகவும் பொருத்தமான மற்றும் நேர்த்தியான தெலுங்கு வசனங்களுடன் கூடிய ஒரு தென்றலான, நன்கு தயாரிக்கப்பட்ட காதல் நகைச்சுவைத் திரைப்படம் இது. இதில் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜனின் நடிப்பு உணர்வு அருமையாக இருக்கிறது. மேலும் ஷேன் ரோல்டனின் இசை அழகாக உள்ளது.
இதையும் படிங்க: ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் பட ஓடிடி- சாட்டிலைட் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்?
இயக்குநர் மதனின் அருமையான அறிமுகத்திற்கு பாராட்டுக்கள், அவர் இன்னும் நீண்டதூரம் செல்லவேண்டும். மேலும் இப்படத்தய் தயாரித்த சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்த ராணா டகுபதி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
வித் லவ் படத்தை வாழ்த்தி இயக்குநர் அனில் ரவிபுடி வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Truly enjoyed watching #WithLove 🩶
A breezy, well-made rom-com in recent times with very apt and neatly penned Telugu dialogues.@Abishanjeevinth & #AnaswaraRajan feels spot on, and @RSeanRoldan’s music works beautifully.
Kudos to @madhann_n on a fantastic debut. Long way to…
— Anil Ravipudi (@AnilRavipudi) February 8, 2026
அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜனின் கூட்டணியில், கடந்த 2026 பிப்ரவரி 6ம் தேதியில் இந்த வித் லவ் படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது மக்களிடையே முதல் நாளே பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்திருந்த நிலையில், வார இறுதியை முன்னிட்டு திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் திரையிடப்பட்டுவருகிறது. மேலும் இப்படமானது வெளியான முதல் நாளிலே ரூ 2 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் விரைவில் டூரிஸ்ட் பேமிலி படத்தை போலவே இப்படமும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.