Suriya : ‘ரெட்ரோ’ படச் சண்டைப் பயிற்சி.. அதிரடி நாயகன் சூர்யாவின் வீடியோ வைரல்!
Suriya Retro Movie Fight Training : நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக் சுப்பராஜின் கூட்டணியில் இறுதியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தில் சூர்யா அதிரடி ஆக்ஷன் நாயகனாகவே வாழ்ந்திருந்தார் என்று கூறலாம். அந்த படத்தில் பிரபலமான சண்டைக் காட்சிகளை, சூர்யா பயிற்சி செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியான திரைப்படம் ரெட்ரோ (Retro). இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் முன்னணி ஹீரோவாக நடிகர் சூர்யா (Suriya) நடித்திருந்தார். சூர்யா இப்படத்திற்கு முன் நடித்த கங்குவா (Kanguva) கடும் தோல்வியடைந்த நிலையில், இந்த ரெட்ரோ படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தது. அந்தவகையில் இந்த ரெட்ரோ படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்தது என்றே கூறலாம். அந்த அளவிற்கு மக்களிடையே இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்திருந்தார். இவரின் நடிப்பும் இப்படத்தில் நன்றாக இருந்தது என்றே கூறலாம்.
இந்த படத்தில் சூர்யா நடித்திருந்த கதாபாத்திரமும் பலராலும் ரசிக்கப்பட்டிருந்தது. அந்த அளவிற்கு அந்த படத்தில் ‘பாரிவேல் கண்ணன்’ என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்தார். இந்நிலையில், அந்த படத்திற்காக சண்டைப் பயிற்சி மேற்கொண்ட சூர்யாவின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது அவர் பயிற்சி செய்திருந்த வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.




இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் சண்டைப் பயிற்சி வீடியோ :
#Retro hospital fight workshop video 🔥 pic.twitter.com/qLc7fZawSY
— Naveen (@NaveenSuriya_FC) June 9, 2025
ரெட்ரோ படத்தின் பிரம்மாண்ட வெற்றி :
கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யாவின் கூட்டணியில் இந்த ரெட்ரோ படமானது உருவாகியிருந்தது. இப்படத்தையும் இவர்கள் இருவருமே இணைந்து தயாரித்திருந்தனர். கடந்த 2025, மே 1ம் தேதியை இப்படம் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து வெளியான அனைத்து பாடல்களும் ட்ரெண்டானது என்றே கூறலாம்.
அந்த அளவிற்கு இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பு இருந்தது. இந்த படமானது உலக அளவில் சுமார் ரூ. 232 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் புதிய படங்கள் :
நடிகர் சூர்யாவின் நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா45 என்ற படமானது பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மேலும் இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா46 படத்தில் இணைந்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, ஜூன் 9ம் தேதி முதல் ஹைதராபாத்தில் தொடங்கியது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தைப் படக்குழு வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.