டூரிஸ் ஃபேமிலி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த் – இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு

Tourist Family Movie: அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நடிகர்கள் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான் டூரிஸ்ட் ஃபேமிலி படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தை மக்கள் மட்டும் இன்றி பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

டூரிஸ் ஃபேமிலி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த் - இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு

டூரிஸ் ஃபேமிலி

Published: 

12 May 2025 13:42 PM

நடிகர்கள் சசிகுமார் (Sasikumar) மற்றும் சிம்ரன் (Simran) நடிப்பில் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். படத்தில் நடித்த அனைத்து நடிகர்களின் நடிப்பும் தொடர்ந்து பாராட்டப்பட்டு வருகின்றது. இலங்கையில் இருந்து வாழ்வாதாரத்திற்காக தமிழகத்திற்கு கடல் கடந்து வரும் ஒரு குடும்பத்தை சுற்றி அமைக்கப்பட்ட இந்தப் படம் எந்தவிதமான மன அழுத்தையும் ஏற்படுத்தாமல் மிகவும் மெல்லிய உணர்வுடன் காமெடி கலந்து அழகாக காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர். தமிழில் இப்படி ஒரு ஃபீல் குட் படம் வெளியானதை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவை நேரில் அழைத்து படத்திற்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார். தொடர்ந்து பிரபலங்கள் சமூக வலைதளத்தில் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் மிகவும் மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே போன் பேசுவதுபோல ஒரு புகைப்படமும் இருந்தது. மேலும் அந்த ஸ்ரோரிக்கு சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் பாடலான சிங்க நடைப் போட்டு பாடலில் இருந்து மாலைகள் இட வேண்டாம் தங்க மகுடமும் தரவேண்டாம் என்ற பாடலின் வரிகளும் ஒலித்துக் கொண்டிருந்தது.

படக்குழு வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு:

அந்தப் படதிவில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கூறியுள்ளதாவது, இந்த போன் கால் உண்மையிலேயே நடந்ததுன்னு நம்பவே முடியல. சூப்பர் ஹ்யூமனிடமிருந்து ஒரு ஸ்பெஷல் கால் வந்தது. மேலும் ரஜினிகாந்த் படம் குறித்து பேசியதாவது, சூப்பர் சூப்பர் சூப்பர் எக்ஸ்டாடினரி என்று தெரிவித்துள்ளார்.

பிரபு தேவா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

அதே போல டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் பார்த்த நடன இயக்குநர் பிரபுதேவா தனது எக்ஸ் தள பக்கத்தில் படத்தைப் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் பார்த்தேன். என்ன ஒரு அற்புதமான படம். படம் பார்த்துக்கொண்டிருந்த போது பலமுறை சிரித்தேன் அழுதேன். இந்த  மாதிரியான அழகான பயணத்தை கொடுத்ததற்காக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி. மேலும் இந்தப் படத்திற்காக இப்படி ஒரு அற்புதமான குழுவைத் தேர்ந்தெடுத்ததற்காக தயாரிப்பாளருக்கு சிறப்பு பாராட்டுகள் என்றும் தெரிவித்திருந்தார்.