Sudha Kongara: பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் இறந்துவிடுமா? சுதா கொங்கரா பகிர்ந்த விஷயம்!
Parasakthi Movie Climax :நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம்தான் பராசக்தி. இந்த படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் எல்லாம் நிறைவடைந்த நிலையில், 2025 ஜனவரி 10ல் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சுதா கொங்கரா, பராசக்தி பட க்ளைமேக்ஸ் குறித்து பேசியுள்ளார்.

சிவராக்திகேயன் - சுதா கொங்கரா
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர்தான் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் சினிமாவில் தொடர்ந்து புது திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் புதியதாக வெளியீட்டிற்கு தயாராகிவரும் திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் (GV.Prakash Kumar) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இளம் நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் ரவி மோகன் (Ravi Mohan), அதர்வா (Athrvaa) உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தை டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அதன்படி இப்படம் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த வகையில் இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சுதா கொங்கரா, பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் மற்றும் க்ளைமேக்ஸ் பற்றிப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: கேரளாவில் ஜன நாயகன் படத்தின் FDFS எப்போது தொடங்குகிறது தெரியுமா? வைரலாகும் தகவல்
சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் குறித்து பேசிய சுதா கொங்கரா:
அந்த நேர்காணலில் சுதா கொங்கராவிடம் தொகுப்பாளர், ” பராசக்தி திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் இறந்துவிடும் என வதந்திகள் பரவி வருகிறது. அது உண்மையா? என கேள்வி கேட்டிருந்தார். இதை பதிலளிக்கும் விதத்தில் பேசிய சுதா கொங்கரா, “அந்த விஷயம் திரைப்படத்தை பார்த்தபிறகுதான் உங்களுக்கு தெரியும்” என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ‘கண்ணே மணியே கண்ணிமையே’… வெளியானது ஜன நாயகன் படத்தின் 3வது பாடல்!
இந்த படமானது இந்தி திணிப்பிற்கு எதிரான உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உண்மை சம்பவத்தில் அந்த கதாபாத்திரம் இறந்துவிட்ட நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள கதாபாத்திரம் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியின்போது இறந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பராசக்தி பட கண்காட்சி குறித்து படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு :
The excitement is only getting bigger 🔥
Phenomenal energy and overwhelming turnout for #WorldOfParasakthi at Valluvar Kottam
Open for audiences till December 28 🗓️
Venue:- Valluvar Kottam
Time:- 12PM – 10 PM#ParasakthiFromPongal#ParasakthiFromJan10@siva_kartikeyan… pic.twitter.com/r78rdgWOWR— DawnPictures (@DawnPicturesOff) December 25, 2025
இந்த பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அவரும் 2026ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதியில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள் அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுவதாகவும், இதில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உட்பட பல்வேறு பிரபலங்களும் கலந்துகொள்வதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.