பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து – ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு!

Vettuvam Movie Stunt Master death : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக இருப்பவர் பா. ரஞ்சித். இவரின் இயக்கத்திலும், ஆர்யாவின் நடிப்பிலும் வேட்டுவம் என்ற திரைப்படம் பிரம்மாண்டமாகத் தயாராகிவருகிறது. இந்நிலையில், இன்று 2025, ஜூலை 13ம் தேதி, இப்படத்தின் படப்பிடிப்பின்போது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்துள்ளார். இந்த தகவல் கோலிவுட் திரையுலகினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பா. ரஞ்சித்தின் வேட்டுவம் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து - ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு!

வேட்டுவம் ஷூட்டிங் விபத்து

Published: 

13 Jul 2025 17:06 PM

 IST

நடிகர் ஆர்யாவின் (Arya) முன்னணி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் வேட்டுவம் (Vettuvam). இப்படத்தில் ஆர்யாவுடன், நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் அட்டகத்தி தினேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தைத் தமிழ் இயக்குநர் பா. ரஞ்சித் (Pa. Ranjith) இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் (Stunt master) உயிரிழந்துள்ளார். வேட்டுவம் திரைப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (Mohanraj) என்பவர் உயிரிழந்துள்ளார். வேட்டுவம் படத்தின் ஷூட்டிங்கின் போது காரில் இருந்து குதித்தபோது, தவறுதலாகக் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலானது படக்குழுவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் நாகை மாவட்டம் பகுதியில் நடந்து வந்த நிலையில், இந்த சோகம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக இந்த வேட்டுவம் திரைப்படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜின் உயிரிழப்பு படக்குழுவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : பழம்பெரும் நடிகர்.. சாமி பட வில்லன் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் காலமானார்..

வேட்டுவம் திரைப்படம் நடிகர்கள் :

இந்த வேட்டுவம் திரைப்படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்க,  ஆர்யா, அட்டகத்தி தினேஷ் மற்றும் அசோக் செல்வன் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தில் முன்னணி கதாநாயகியாக சோபிதா துலிபலா நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவின் மனைவி.

இதையும் படிங்க : கார்த்திக் ராஜா எனது சிறந்த நண்பர்.. விமர்சனங்களுக்கு வனிதா விஜயகுமார் விளக்கம்!

வேட்டுவம் திரைப்பட ஷூட்டிங் :

பா. ரஞ்சித்தின் இந்த வேட்டுவம் திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, மே மாதத்தின் தொடக்கத்தில் ஆரம்பித்தது. இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம்தான் தயாரித்தும் வருகிறது. இந்த திரைப்படமானது முழுக்க கிரைம் திரில்லர் திரைக்கதைகளுடன் உருவாகிவருகிறது. இந்த படத்தில் முக்கிய வில்லனா நடிகர் ஃபகத் பாசில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகி நடந்து வரும் நிலையில், நாகை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் வரும் 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகி வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories
Suriya47: ஷூட்டிங்கிற்கு முன்னே சூர்யா47 படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்?
அதிக எதிர்பார்ப்பு.. ஆனால் தியேட்டரில் ஓடல.. 2025ல் எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியுற்ற படங்கள் இதுதான்!
karthi: வா வாத்தியார் பட கதை என்னை ரொம்பவே பயமுறுத்திடுச்சு.. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை- கார்த்தி ஓபன் டாக்!
Rathna Kumar: 29 படத்தின் கதை கூட லோகேஷ் கனகராஜிற்கு தெரியுமான்னு தெரியல.. கலகலப்பாக பேசிய இயக்குநர் ரத்ன குமார்!
Padayappa: போட அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்.. வெளியானது ‘படையப்பா’ பட ரீ-ரிலீஸ் ட்ரெய்லர்!
தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய டாப் 5 படங்கள் – லிஸ்ட் இதோ
குளிர்கால ஆடைகளை எப்படி ஃபேஷன் ஸ்டேட்மெண்டாக மாற்றுவது.. நடிகர்களின் தேர்வு என்ன?
சீனப் பெண்ணுக்கும் இந்திய இளைஞனுக்கும் நடந்த திருமணம்.. இணையத்தில் வைரலாகும் காதல் கதை..
25கிலோ மீட்டர் தான் தூரம்.. சகோதரனை ஹெலிகாப்டரில் வந்து அழைத்துச் செல்லும் சகோதரி!!
கோஹலி மற்றும் ரோகித் இல்லாமல், 2027 உலகக் கோப்பையை வெல்ல முடியாது - முகமது கைஃப்..