Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சூர்யா 46 படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகர் – இணையத்தில் கசிந்த தகவல்

Actor Suriya: நடிகர் சூர்யா ரெட்ரோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது தனது 45-வது படத்திற்காக நடிகரும் இயக்குநருமானா ஆர்.ஜே.பாலாஜியுடன் பணியாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து தனது 46-வது படத்திற்காக இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் கூட்டணி வைக்க உள்ளார். இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூர்யா 46 படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகர் – இணையத்தில் கசிந்த தகவல்
சூர்யாImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 14 May 2025 07:00 AM

நடிகர் சூர்யாவின் (Actor Suriya) நடிப்பில் சமீபத்தில் அவரது 44-வது படமான ரெட்ரோ திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Director Karthik Subbaraj) இயக்கத்தில் உருவான இந்தப் படம் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு நாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்த நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் நாசர், ஜோஜூ ஜார்ஜ், பிரகாஷ் ராஜ், கருணாஸ், சுவாசிகா, ஜெயராம் என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு ரெட்ரோ படத்தின் மீது சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். படம் சூர்யா ரசிகர்களிடையே வெற்றிப்படமாக அமைந்தாலும் சாதாரண பார்வையாளர்கள் இடையே ரெட்ரோ படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் சூர்யா இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி உடன் தனது 45-வது படத்திற்காக கூட்டணி வைத்தார். ரெட்ரோவின் பணிகள் நடைபெறும் போதே நடிகர் சூர்யா தனது 45-வது படத்தின் படப்பிடிப்பு பணிகளிலும் கலந்துகொண்டார்.

இந்த நிலையில் தற்போது 45-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் சூர்யா அவரது 46-வது படத்தின் கூட்டணி குறித்து அறிவித்தார். அதன்படி அவர் தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம் வரும் வெங்கி அட்லூரி உடன் இணைய உள்ளதை ரெட்ரோ படத்தின் புரமோஷன் விழாவில் தெரிவித்தார்.

இயக்குநர் வெங்கி அட்லூரி தமிழில் நடிகர் தனுஷை வைத்து வாத்தி என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது லக்கி பாஸ்கர் படம்.

இந்தப் படம் தென்னிந்திய மொழிகளில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில், உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. முன்னதாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் அமரன் படம் திரையரங்குகளில் வெளியானதால் தமிழிகத்தில் லக்கி பாஸ்கர் படத்திற்கு குறைந்த அளவிலான திரையரங்குகளே ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால் படத்திற்கு ரசிகர்களிடையே இருக்கும் வரவேற்பைப் பார்த்த திரையரங்க உரிமையாளர்கள் லக்கி பாஸ்கர் படத்திற்கு திரைகளை அதிகப்படுத்தினர். இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது போல வசூல் ரீதியாகவும் மாஸ் காட்டியது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி தற்போது சூர்யாவின் 46-வது படத்தை இயக்க உள்ளார்.

இந்த நிலையில் இந்தப் படம் குறித்த அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

திருநெல்வேலியில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!
திருநெல்வேலியில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!...
லவ்லி படத்திற்கும் ஈகா படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
லவ்லி படத்திற்கும் ஈகா படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை......
வாழ்க்கையை மாற்றும் கண் திருஷ்டி பிரச்னை.. கண்டறிவது எப்படி?
வாழ்க்கையை மாற்றும் கண் திருஷ்டி பிரச்னை.. கண்டறிவது எப்படி?...
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவை முன்கூட்டியே வெளியிட திட்டமா?
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவை முன்கூட்டியே வெளியிட திட்டமா?...
ஐபிஎல் நடுவே சர்வதேச போட்டிகள்.. சிக்கலில் வெளிநாட்டு வீரர்கள்..!
ஐபிஎல் நடுவே சர்வதேச போட்டிகள்.. சிக்கலில் வெளிநாட்டு வீரர்கள்..!...
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் கவாய்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் கவாய்...
+2 துணைத்தேர்வு: மாணவர்கள் இன்று முதல் பள்ளியில் விண்ணப்பிக்கலாம்
+2 துணைத்தேர்வு: மாணவர்கள் இன்று முதல் பள்ளியில் விண்ணப்பிக்கலாம்...
முதுமலையில் முதல்வர்.. யானைகளுக்கு கரும்பு வழங்கிய ஸ்டாலின்!
முதுமலையில் முதல்வர்.. யானைகளுக்கு கரும்பு வழங்கிய ஸ்டாலின்!...
ரஜினி குறித்து நெகிழ்ந்து பேசிய லோகேஷ் கனகராஜ்!
ரஜினி குறித்து நெகிழ்ந்து பேசிய லோகேஷ் கனகராஜ்!...
இந்தியர்களுக்கு சிக்கல்? குடியேற்ற விதிகளை கடுமையாக்கிய பிரிட்டன்
இந்தியர்களுக்கு சிக்கல்? குடியேற்ற விதிகளை கடுமையாக்கிய பிரிட்டன்...
தமிழகத்தில் தேங்காய் விலை உச்சத்திற்கு போகுமா?
தமிழகத்தில் தேங்காய் விலை உச்சத்திற்கு போகுமா?...