சார்பாட்டா 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்

Sarpatta 2 Movie Shooting Update: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இயக்குநர்களின் ஒருவர் இயக்குநர் பா ரஞ்சித். இவரது இயக்கத்தில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

சார்பாட்டா 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்

சார்பாட்டா 2

Published: 

09 Nov 2025 16:48 PM

 IST

தமிழ் சினிமாவில் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் (Director Venkat Prabhu) உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் பா. ரஞ்சித். அதனைத் தொடர்ந்து அட்டக்கத்தி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கார்த்தி, ரஜினிகாந்த், ஆர்யா மற்றும் விக்ரம் என பலரை வைத்து படங்களை இயக்கி உள்ளார். அதன்படி இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ், கபாலி, காலா, சார்பாட்ட பரம்பரை மற்றும் தங்கலான் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இந்தப் படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித் தற்போது தங்கலான் படத்தை தொடர்ந்து வேட்டுவம் என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் சயின்ஸ் ஃபிக்சன் ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஆர்யா, தினேஷ் மற்றும் சோபிதா துலிபாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் சமீபத்தில் நடிகர் தினேஷின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்ட வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

சார்பாட்ட 2 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்?

இந்த நிலையில் இந்த வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஆர்யாவின் நடிப்பில் சார்பாட்ட 2 படம் தொடங்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக  ஆர்யவின் நடிப்பில் வெளியான சார்பாட்ட படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. கொரோனா காலம் என்பதால் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை.

ஆனால் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் வசூலில் கலக்கி இருக்கும் என்று தொடர்ந்து ரசிகர்கள் தெரிவித்து வந்த நிலையில் சார்பாட்டா 2 படத்தை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… கதை தேர்வு குறித்து பாராட்டிய ரசிகர்… கலகலப்பாக பேசிய துல்கர் சல்மான்!

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ