ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினிகாந்தை இயக்கும் பிரபல இயக்குநர்? இணையத்தை கலக்கும் தகவல்
Super Star Rajinikanth: கூலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து அவர் பிரபல இயக்குநர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த நிலையில் பான் இந்திய நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகளில் கலந்துகொண்டார். கூலி படத்தின் பணிகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்த போதே ஜெயிலர் 2 படத்தின் புரோமோ வீடியோவில் நடித்து இருந்தார் நடிகர் ரஜினிகாந்த். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த அந்த வீடியோ ரஜிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெயிலர் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஜெயிலர் 2 படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் இயக்குநர் சுந்தர் சி:
ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் அந்தப் படத்திற்கு முன்னதாக இயக்குநர் சுந்தர் சி உடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவர்கள் இருவரும் முன்னதாக அருணாச்சலம் படத்தில் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அதன்படி சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி அமைய உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Rajinikanth Next…..👀
There’s a question about who Rajinikanth will work with after #Jailer2……🙌🏼 However, reports now suggest that there is a high possibility of Rajinikanth acting in a film directed by #SundarC….🧨 pic.twitter.com/EAu2cpwyhM
— Movie Tamil (@_MovieTamil) October 15, 2025
Also Read… டீசல் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது – வைரலாகும் போஸ்ட்