தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகருடன் கூட்டணி வைத்த லோகேஷ் கனகராஜ்? வைரலாகும் தகவல்
Director Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகரை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியான மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளியான முதல் படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் வித்யாமசான க்ரைம் த்ரில்லர் பாணியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைதி என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் முழுக்க முழுக்க இரவில் எடுக்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வித்யாசமான அனுபவத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர்கள் கமல் ஹாசன், விஜய் நடிப்பில் அடுத்தடுத்து விக்ரம், மாஸ்டர், லியோ என தொடர்ந்து படங்களை ஹிட் கொடுத்தார்.
இப்படி வரிசைக்கட்டி ஹிட் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களின் பட்டியளில் இடம் பிடித்தார். இவர் ஒரு படத்தை இயக்குகிறார் என்றால் அது நிச்சயமாக வெற்றியடையும் என்று ரசிகர்களுக்கு தோன்றும் அளவிற்கு தொடர்ந்து படங்களை ஹிட் கொடுத்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இறுதியாக தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படமும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகருடன் கூட்டணி வைத்த லோகேஷ்:
இந்த நிலையில் கூலி படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தி நடிப்பில் கைதி 2 படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இந்தப் படத்தை தொடர்ந்து அவர் கைதி 2 படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு தற்போதும் ஏமாற்றமே கிடைத்துள்ளது. தொடர்ந்து தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அல்லூ அர்ஜூன் உடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை தான் அடுத்து லோகேஷ் இயக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Also Read… விக்ரம் பிரபுவின் சிறை படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#LK7 Ready ✌🏼
— #LokeshKanagaraj and #AlluArjun’s meeting has concluded successfully 🤝✨
— Lokesh’s next film is going to star Allu Arjun 🎬🔥
— The shooting of this film is scheduled to begin in June next year 📅🎥
— They are planning to complete the film by March 2027 ⏳
—… pic.twitter.com/sr53zwV0rZ— Movie Tamil (@_MovieTamil) December 25, 2025
Also Read… மீண்டும் இரட்டை வேடத்தில் நடிகர் அருண் விஜய்… ரெட்ட தல வெற்றியடைந்தா? இல்லையா? விமர்சனம் இதோ!