Seyon Movie: சிவகார்த்திகேயனின் சேயோன் ரிலீஸ் தேதி எப்போது இருக்கும்? பொங்கலில் விட்டதை இப்படத்தின் மூலம் பிடிப்பாரா?
Seyon Movie Release Date Update: சிவகார்த்திகேயனின் நடிப்பில் இறுதியாக பராசக்தி என்ற படமானது வெளியானது. இதையடுத்து தாய் கிழவி பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புது படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு சேயோன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சிவகார்த்திகேயனின் சேயோன்
கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த படமானது கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் வெளியாகியிருந்த நிலையில், எதிர்பார்த்ததை விடவும் குறைவான வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து இயக்குநர் வெங்கட் பிரபுவின் (Venkat Prabhu) கூட்டணியில் சிவகார்த்திகேயன் புது படத்தில் இணைவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக தாய் கிழவி (Thaai Kizhavi) பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murtugesan) இயக்கத்தில் தனது 26வது படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு “சேயோன்” (Seyon) என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் முதல் பார்வை நேற்று 2026 பிப்ரவரி 16ம் தேதியில் வெளியாகி வரவேற்கப்பட்டது. இன்று 2027 பிப்ரவரி 17ம் தேதியில் சிவகார்த்திகேயனின் 41வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் சாமியாடியாக காண்பிக்கப்பட்டுள்ளார். இந்த படமானது 2026 அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில், இதன் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: அனிருத் இசையில் தி பாரடைஸ் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் குறித்து வெளியானது அப்டேட்
சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் :
சிவகார்த்திகேயனின் இப்படத்தில் அவருடன் நடிகர் பாலா சரவணா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இன்னும் யார் நடிக்கவுள்ளார் என அறிவிக்கப்படவில்லை. ஆனால் அவருக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் வரும் 2026 அக்டோபர் மாதத்தில் இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில், சரஸ்வதி பூஜை விடுமுறையில் வெளியாகவுள்ளதாம்.
இதையும் படிங்க: இந்த வார இறுதியில் வெளியாகும் AK64 டைட்டில் மற்றும் அறிவிப்பு? வைரலாகும் தகவல்
அதன்படி வரும் 2026 அக்டோபர் 16ம் தேதியில் சேயோன் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறதாம். 2026 அக்டோபர் 16ம் தேதி வெள்ளிக்கிழமை என்ற நிலையில், 19ம் தேதியில் ஆயுதபூஜை அதை தொடர்ந்து, ஒரு வாரமாக தொடர் விடுமுறை இருக்கும் நிலையில், பராசக்தி பட தோல்விக்கு பின் இந்த சேயோன் படம் சிவகார்த்திகேயனுக்கு வெற்றியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேயோன் திரைப்படத்தின் புரோமோ வீடியோ குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :
#Seyon – The Celebration
➡️ https://t.co/ec7g5HQoGy#HappyBirthdaySK#SeyonOct2026 #சேயோன் #OneMoreTime#KamalHaasan #Sivakarthikeyan@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Dir_SivakumarM @Music_Santhosh @RKFI @turmericmediaTM @bala_actor @vivekvdop @Sanlokesh… pic.twitter.com/AGincEf9Rw
— Raaj Kamal Films International (@RKFI) February 17, 2026
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில், புரோமோவில் பின்னணி இசையின் அருமையாகவே இருந்தது. மேலும் இப்படம் தெய்வீகம், ஆக்ஷன் மற்றும் கிராமப்புற கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், சிவகார்த்திகேயனுக்கு வெற்றிக்கனியை தரும் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.