கரகாட்டக்காரன் படத்தில் நான்தான் நடிக்க வேண்டியது – நடிகை சோபனா சுவாரஸ்ய பேச்சு

Actress Shobana About Karakattakaran Movie: மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சோபனா. தேசிய விருது பெற்ற இந்த நடிகை சோபனா முன்னதாக அளித்தப் பேட்டி ஒன்றில் கரகாட்டகாரன் படத்தின் தான் நடிக்க வேண்டியது என்று தெரிவித்துள்ளார்.

கரகாட்டக்காரன் படத்தில் நான்தான் நடிக்க வேண்டியது - நடிகை சோபனா சுவாரஸ்ய பேச்சு

சோபனா

Published: 

26 Jun 2025 15:12 PM

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் நாயகியாக ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை சோபனா (Actress Shobana). பான் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் பல நடிகர்களுக்கு ஜோடியாக திரையைப் பகிர்ந்தவர் நடிகை சோபனா. இவருக்கு சமீபத்தில் மத்திய அரசு தேசிய விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தகது. இந்த நிலையில் நடிகை சோபனா முன்னதாக அளித்தப் பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கரகாட்டக்காரன் படத்தின் தான் தான் நாயகியாக நடிப்பதாக இருந்தது என்று பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இசையமைப்பாளர் கங்கை அமரன் இயக்கத்தில் நடிகர் ராமராஜன் (Actor Ramarajan) நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தப் படம் கரகாட்டக்காரன்.

1989-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் சமீபத்தில் 36 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்த நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சோபனா கரகாட்டக்காரன் படத்தில் நான்தான் நாயகியாக நடிப்பதாக இருந்தது. அதில் டான்ஸ் தான கதை. ஆனால் எதிர்பாராத சூழல் காரணமாக அந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய கரகாட்டக்காரன் படம்:

36 வருடங்களுக்கு முன்பாக கரகாட்டத்தை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் நடிகர் ராமராஜன் நாயகனாக நடிக்க நடிகை கனகா நாயகியாக நடித்து இருந்தார். இவர்கள் இருவரும் கரகாட்டம் ஆடும் கலைஞர்களாக இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்ட பிறகு இவர்களின் இரண்டு குடும்பங்களுக்கு இடையே உள்ள முன்பகை தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து அந்த பிரச்னைகள் அனைத்தையும் சரி செய்து இவர்களின் காதலில் வெற்றிப் பெற்றார்களா என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, காந்திமதி, சந்தான பாரதி, சந்திரசேகர் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை சோபனாவின் நடிப்பில் தமிழ் சினிமாவில் ஹிட் அடித்தப் படங்கள்:

பரதநாட்டிய கலைஞரான நடிகை சோபனா தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது நடிப்பில் தமிழில் வெளியான எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு, சட்டத்தின் திறப்பு விழா, பட்டத்துக்கு ஒரு தலைவன், பொன்மன செல்வன், வாத்தியார் வீட்டுப் பிள்ளை, எங்கிட்ட மோதாதே, மல்லுவேட்டி மைனர், சத்யவாக்கு மற்றும் தளபதி என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

Related Stories
காமெடி படத்தில் இத்தனை ட்விஸ்டா? அமேசான் ப்ரைம் வீடியோவில் இருக்கும் இந்த மதுர மனோகர மோஹம் படத்தை கண்டிப்பா பாருங்க!
ஜோதிகா மற்றும் கார்த்தி இல்லாமல் சூர்யா இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் அந்த ஒரே ஒரு தமிழ் நடிகர்… யார் தெரியுமா?
பிளாக் மெயில் முதல் சரண்டர் வரை… இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
இனி ஃபேமிலி செண்டிமெண்ட்லாம் ஹிட்டடிக்கதுனு நீ சினிமாவை விட்டு போ சொன்னாங்க – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!
பண மோசடி வழக்கில் பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டேன்…. ‘கிங்டம்’ பட நிகழ்வில் விஜய் தேவரகொண்டா உருக்கம்!