Karthi : கார்த்தியின் பிறந்த நாள்.. படக்குழுக்கள் வெளியிட்ட அதிரடி போஸ்டர்ஸ்!

Happy Birthday Karthi : கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கார்த்தி. இவருக்கு இன்று 2025, மே 25ம் தேதியில் தனது 48வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு, சர்தார் 2 மற்றும் வா வாத்தியார் படக்குழுக்கள் நியூ போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.

Karthi : கார்த்தியின் பிறந்த நாள்.. படக்குழுக்கள் வெளியிட்ட அதிரடி போஸ்டர்ஸ்!

வா வாத்தியார் மற்றும் சர்தார் 2

Published: 

25 May 2025 15:35 PM

நடிகர் கார்த்தி (Karthi) சிறந்த நடிகர் மற்றும் மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இவரின் நடிப்பில் இதுவரை பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. பிரபல நடிகர் சிவகுமாரின் மகன், நடிகர் சூர்யாவின் தம்பியாக திரையுலகில் நுழைந்தாலும் தனக்கென தனி பாணி நடிப்பை உருவாக்கி நடித்து வெற்றி பெற்றிருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மெய்யழகன் (Meiyazhagan). இந்த படத்தை 96 திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இருவரும் நடித்திருந்தனர். இந்த படமானது மக்கள் மனதில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமியின் (Nalan Kumaraswamy) இயக்கத்தில் வா வாத்தியார் (vaa Vaathiyaar) என்ற திரைப்படமும், இயக்குநர் பிஎஸ் மித்ரன் (PS Mithran) இயக்கத்தில் சர்தார் 2 (Sardar 2) படத்திலும் ஒப்பந்தமானார்.

இந்த இரு படங்களும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இதில் சர்தார் 2 ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், வா வாத்தியார் படம் போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணிகளில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று 2025, மே 25ம் தேதியில் நடிகர் கார்த்தியின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த இரு படங்களும் புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.

சர்தார் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

இயக்குநர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இந்த சர்தார் 2 படமானது பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இந்த படமானது கடந்த 2022ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் தொடர்ச்சியான கதைகளதுடன் சர்தார் 2 படம் உருவாகிவருகிறது. இந்த படத்தில் கார்த்தி மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் மற்றும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா முன்னணி வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் போஸ்டர் மற்றும் அறிமுக வீடியோ கடந்த 2025, மார்ச் மாதத்தில் வெளியாகியிருந்தது. மேலும் இந்த படமானது இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் இருந்து வரும் நிலையில், வரும் 2025, தீபாவளி அல்லது 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வா வாத்தியார் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

கார்த்தியின் இந்த படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2022ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து விறுவிறுப்பாக உருவாகி வந்தது. இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கிருத்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையான நிறைவடைந்த நிலையில், இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.