Sarathkumar : 3BHK பட வரவேற்பு… இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத்திற்கு பரிசு கொடுத்த சரத்குமார்!

Sarathkumar about Music Director Amrit Ramnath : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான சித்தார்த் மற்றும் சரத்குமார் கூட்டணியில் வெளியான படம் 3BHK. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், நன்றி தெரிவிக்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின்போது சரத்குமார், இப்படத்தின் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத்திற்கு பரிசு கொடுத்துள்ளார்.

Sarathkumar : 3BHK பட வரவேற்பு... இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத்திற்கு பரிசு கொடுத்த சரத்குமார்!

சரத்குமார் மற்றும் அம்ரித் ராம்நாத்

Updated On: 

09 Jul 2025 13:44 PM

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் (Sri Ganesh) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 3BHK. இந்த திரைப்படத்தில் தமிழ் பிரபல நடிகர்கள் சரத்குமார் (Sarathkumar) மற்றும் சித்தார்த் (Siddharth) லீட் ரோலில் நடித்திருந்தனர். இந்த திரைப்படமானது முற்றிலும் மாறுபட்ட எமோஷனல் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடிகை தேவயானி (Devayani) நடித்துள்ளார். இந்த ஜோடி, சூர்ய வம்சம் படத்தை அடுத்துப் பல வருடங்களுக்குப் பின், இந்த 3BHK திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்த திரைப்படமானது சித்தார்த்தின் 40வது திரைப்படமாகக் கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங்கும் நடந்துவந்த நிலையில், கடந்த 2025, ஜூலை 4ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. மக்கள் மத்தியில் இப்படமானது, நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படக்குழு சமீபத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விழா ஒன்றை நடத்தியுள்ளது. அந்த விழாவில், நடிகர் சரத்குமார் இப்படத்தின் இசையமைப்பாளரான அம்ரித் ராம்நாத்திற்கு (Amrit Ramnath) தனது விலையுயர்ந்த வாட்சை பரிசாகக் கொடுத்துள்ளார். இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது, மேலும் ரசிகர்கள் சரத்குமாரின் பெருந்தன்மையை பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க :ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் இணைந்த நடிகர் மோகன்லால்? வைரலாகும் தகவல்

சரத்குமார் மேடையில் பேசிய விஷயம் :

நிகழ்ச்சி மேடையில் நடிகர் சரத்குமார், ” இந்த படத்தின் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத், படத்தின் காட்சிகளுக்கு என்ன இசை வேண்டும் என அழகாகத் தனது பணியைச் செய்துள்ளார். அவர் ஒரு முறை எனது வாட்ச் மிகவும் அழகாக இருக்கிறது எனக் கூறியிருந்தார். எனவே அவருக்கு நான் இந்த வாட்சை பரிசாகக் கொடுக்க விரும்புகிறேன்”, என நடிகர் சரத்குமார் தனது கையில் கட்டியிருந்த விலையுயர்ந்த வாட்சை இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத்திற்கு பரிசாகக் கொடுத்துள்ளார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :கோலமாவு கோகிலா படத்தில் முகத்தில் கால் வைத்த நயன்தாரா.. யோகி பாபு சொன்ன சம்பவம்!

3BHK படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு :

இந்த 3BHK திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற வருகிறது. கடந்த 2025, ஜூலை 4ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிவரும் இப்படமானது, 4 நாட்கள் முடிவில் மொத்தம் ரூ. 4.7 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இன்னும் அதிகம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.