Eko Movie: முழுவதும் திரில்லர்.. சந்தீப் பிரதீப்பின் எக்கோ படத்தை எந்த ஓடிடியில்.. எப்போது பார்க்கலாம்?

Eko OTT Release: மலையாள சினிமாவில் பொதுவாகவே வித்தியாசமான கதைகளை கொண்டத் திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் நடிகர் சந்தீப் பிரதீப்பின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரில்லர் திரைப்படம்தான் எக்கோ. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது எந்த ஓடிடியில் எப்போது பார்க்கலாம் என்பது பற்றி விவரமாக காணலாம்.

Eko Movie: முழுவதும் திரில்லர்.. சந்தீப் பிரதீப்பின் எக்கோ படத்தை எந்த ஓடிடியில்.. எப்போது பார்க்கலாம்?

Eko Movie Ott Release

Published: 

26 Dec 2025 23:04 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் மலையாள சினிமாதான் (Malayalam Cinema) வித்தியாசாமான கதைகளுக்கு பெயர்போனது. இந்த சினிமாவில் வெளியாகும் படங்கள் முற்றிலும் வித்தியாசமாக அமைந்திருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் ஆலப்புழா ஜிம்கானா (Alappuzha Gymkhana) மற்றும் படக்கலம் (Padakkalam) போன்ற படங்கள் மூலம் தென்னிந்திய மக்களிடையே பிரபலமானவர்தான் நடிகர் சந்தீப் பிரதீப் (Sandeep Pradeep). இவரின் நடிப்பில் தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த படம் தான் எக்கோ (Eko). இந்த படத்தை கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகி பிரபலமான கிஷ்கிந்தா காண்டம் படத்தை இயக்கிய, இயக்குநர் திஞ்சித் அய்யத்தான் (Dinjith Ayyathan) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியான இப்படமும் ஒரு ஹாரர் திரில்லர் கதைக்களத்தில்தான் தயாராகியுள்ளது.

இந்த படமானது கடந்த 2025 நவம்பர் 21ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகர் சந்தீப் பிரதீப்பின் நடிப்பும் அருமையாக இருந்தது என்றே கூறலாம். அந்த வகையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேடி அறிவிக்கப்ட்டுள்ளது.

இதையும் படிங்க: எங்க அண்ணனுக்கு நாங்க தான் செய்வோம்… தளபதி விஜய்க்காக மலேசியாவில் ஒன்றுகூடிய தமிழ் சினிமா பிரபலங்கள்!

இந்த எக்கோ படத்தை எப்போது, எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

இந்த எக்கோ படத்தில் நடிகர்கள் சந்தீப் பிரதீப், நரேன், வினீத், பினு பாப்பு உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது ஒரு கேரளா மற்றும் கர்நாடகா பார்ட்டரில் இருக்கும் ஒரு லாட்சில் இருக்கும் அமானுஷ்யம் சார்ந்த கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் எதிர்பாராத இடங்களில் பல்வேறு டுவிஸ்ட் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவிற்காக மலேசியா புறப்பட்ட விஜய் – வைரலாகும் வீடியோ

அந்த வகையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தராது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் 2025 டிசம்பர் 31ம் தேதியில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாம். தற்போது இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி இணையத்தில் பரவிவருகிறது.

எக்கோ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான அறிவிப்பு பதிவு :

இந்த படமானது இன்னும் சில நாட்களில் ஓடிடியில் வெளியாகிவிடும் என்ற நிலையில், ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் திரையரங்குகளை தொடர்ந்து ஓடிடியிலும் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெரும் என படக்குழு காத்திருக்கின்றனர்.

சமந்தாவுக்காக ஏர்போர்ட்டில் காதலுடன் காத்திருந்த ராஜ்..... வைரலாகும் வீடியோ
இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் சாதனையுடன் பாக்ஸ் ஆபிஸ் அதிர வைத்த துரந்தர் படம்..
அதிகமாக சாப்பிட்ட வருங்கால மனைவி.. நஷ்ட ஈடு வழங்க தொடுத்த வழக்கு..
ஜப்பானில் கடைப்பிடிக்கப்படும் மெட்டபாலிக் லா.. அப்படி என்ன சட்டம் இது?