நடிகை சாய் பல்லவி இந்தியில் அறிமுகம் ஆகும் படத்தின் ரிலீஸ் தேதி இதோ
Actress Sai Pallavi: தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சாய் பல்லவி தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்து உள்ளார். இந்த நிலையில் இவர் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகம் ஆகும் படத்தின் வெளியீட்டு தேதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜுனைத் கான் மற்றும் சாய் பல்லவி
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை சாய் பல்லவி (Actress Sai Pallavi) மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலப் படங்களில் நடித்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சாய் பல்லவி தற்போது இந்தியிலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர தயாராகிவிட்டார். இந்தியில் நடிகை சாய் பல்லவி நடிப்பில் தயாராகி வரும் ராமாயணா படம் இணையத்தில் ரசிகர்களிடையே அதிக கவனத்தைப் பெற்று வந்தாலும் அது நடிகை சாய் பல்லவியில் அறிமுகப் படம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் அவர் இந்தியில் நடிகர் ஜுனைத் கான் உடன் நடிக்கும் ஏக் தின் என்ற படம் தான் நடிகை சாய் பல்லவியின் இந்தி அறிமுகப் படம் ஆகும்.
ரன்பீர் கபூர் உடன் நடிகை சாய் பல்லவி நடித்து வரும் ராமாயணா படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியில் நடிகை சாய் பல்லவி நடிகையாக அறிமுகம் ஆக உள்ள ஏக் தின் என்ற படத்தின் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி நடிகர் ஜுனைத் கான் உடன் நடிகை சாய் பல்லவி இணைந்து நடித்த ஏக் தின் என்ற படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ஏக் தின் என்ற இந்தப் படம் வருகின்ற நவம்பர் மாதம் 7-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக தற்போது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Also read… ஹேக் செய்யப்பட்டது உன்னி முகுந்தனின் இன்ஸ்டா அக்கவுண்ட்… வைரலாகும் போஸ்ட்!
ஜூனைத் கான் மற்றும் சாய் பல்லவியின் ஏக் தின் படத்தின் ரிலீஸ் அப்டேட்:
#Xclusiv… AAMIR KHAN – MANSOOR KHAN REUNITE: SAI PALLAVI – JUNAID KHAN STARRER ‘EK DIN’ TO RELEASE ON 7 NOV 2025… #EkDin – which marks the first-ever on-screen pairing of #SaiPallavi and #JunaidKhan – is set for a theatrical release on 7 Nov 2025.
Directed by #SunilPandey… pic.twitter.com/oMjuAwjK9g
— taran adarsh (@taran_adarsh) July 8, 2025
Also read… Nagarajuna : சசிகுமாரின் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறாரா நாகார்ஜுனா.. எந்த படம் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் நடிகை சாய் பல்லவி நடிப்பில் இறுதியாக வெளியான படங்கள்:
நடிகை சாய் பல்லவி இறுதியாக நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து தமிழ் சினிமாவில் அமரன் என்ற படத்தில் நடித்து இருந்தார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதே போல தெலுங்கு சினிமாவில் நடிகர் நாக சைத்தன்யா உடன் இணைந்து நடிகை சாய் பல்லவி தண்டேல் என்ற படத்தில் நடித்து இருந்தார். இதுவும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது.