திருமணம் செய்துகொள்ளாததற்கு இதுதான் காரணம் – நடிகை சதா

Actress Sadha About Marriage: நடிகை சதா தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வந்தார். இவர் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நிலையில் அதுகுறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

திருமணம் செய்துகொள்ளாததற்கு இதுதான் காரணம் - நடிகை சதா

நடிகை சதா

Published: 

24 Jun 2025 16:22 PM

 IST

தெலுங்கு சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை சதா (Actress Sadha). இந்தப் படத்தை இயக்குநர் தேஜ் (Director Tej)எழுதி இயக்கியதுடன் தயாரிக்கவும் செய்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து கடந்த 2003-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஜெயம் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சதா திருமணம் செய்து கொள்ளாதது குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

திருமணத்தின் மீது ஆர்வம் இல்லை என்று கூறிய சதா:

நடிகை சதாவிற்கு தற்போது 41 வயது நிறைவடைந்த நிலையில் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாதாது குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இது குறித்து பேசிய நடிகை சதா எனக்கு திருமணம் செய்துகொள்வதில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை. நான் புகைப்படத் துறையில் பெரிய அளவில் சாதனை செய்ய வேண்டும் என்பதே எனது கனவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நடிகை சதாவின் இன்ஸ்டாகிராம் பதிவு:

தமிழ் சினிமாவில் நடிகை சதா நடிப்பில் ஹிட் அடித்தப் படங்கள்:

நடிகர் ரவி மோகன் நாயகனாக அறிமுகம் ஆன ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் சதா. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, நான் அவள் அது, உன்னாலே உன்னாலே, புலி வேஷம், எலி, டார்ச் லைட் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இறுதியாக நடிகர் விஷால் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான மத கஜ ராஜா படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகை சதா நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து விலகி உள்ள நடிகை சதா முழு நேரமும் புகைப்பட கலைஞராகவே வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!
Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!
அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்