Rio Raj: மீண்டும் வித்தியாசமான கதையில்… ரியோ ராஜின் 6வது பட டைட்டில் அறிவிப்பு!

Rio Raj New Movie: தமிழ் சினிமாவில் சின்னத்திரை மூலம் மக்களிடையே பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் ரியோ ராஜ். இவர் சினிமாவில் கதாநாயகனாக நடித்துவரும் நிலையில், இவர் நடிக்கவுள்ள 6வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் குறித்து விவரமாக பார்க்கலாம்.

Rio Raj: மீண்டும் வித்தியாசமான கதையில்... ரியோ ராஜின் 6வது பட டைட்டில் அறிவிப்பு!

ராம் இன் லீலா படம்

Published: 

01 Dec 2025 17:10 PM

 IST

நடிகர் ரியோ ராஜ் (Rio Raj) தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை 5 திரைப்படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், அதை தொடர்ந்து இவர் நடிக்கவுள்ள புது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் ரியோவின் நடிப்பில் தமிழில் இறுதியாக “ஆண்பாவம் பொல்லாதது” (Aan Paavam Pollathathu) என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு திரையரங்குகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், தற்போது ஓடிடியிலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தில் ரியோவிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மனோஜ் (Malavika Manoj) நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்ததாக ரியோவின் புது படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இவரின் நடிப்பில் உருவாக்கவுள்ள 6வது படத்தை அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் (Ramachandran Kannan) என்பவர் இயக்கவுள்ளாராம். மேலும் இப்படத்தை ட்ரெய்ட்டன்ட் ஆர்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு “ராம் இன் லீலா” (Ram In Leela) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சூர்யா 46 அந்த ஹிட் படம் மாதிரி இருக்கும் – ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்

நடிகர் ரியோ ராஜ் வெளியிட்ட புது படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் :

இந்த ராம் இன் லீலா திரைப்படத்தில் நடிகர் ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை வர்த்திகா (Vartika) நடித்துவருகிறார். இவர் இந்த படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அங்கித் மேனன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், வரும் 2026ம் ஆண்டு கோடைகாலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.

இதையும் படிங்க: சர்வதேச திரைப்பட விழாவில் காந்தாரா படம் குறித்து ரன்வீர் சிங் செயலால் கிளம்பிய சர்ச்சை.. வைரலாகும் வீடியோ!

இந்த படமானது முற்றிலும் காதல், எமோஷனல் மற்றும் திருமணம் தொடர்பான கதைக்களத்தில் உருவாகிவருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னை சுற்றுவட்டாரங்களில் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்தாகவும் நடிகர் ரியோ ராஜ் புதிய படங்களுக்கான கதைகளை கேட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது ராம் இன் லீலா படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டர் வெளியான நிலையில், விரைவில் இப்படத்தை பற்றிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூரியன் மறைந்த பிறகு ஏன் நகம் வெட்டக்கூடாது?
ஒரே காரில் வலம் வந்த தோனி - கோலி கூட்டணி - வைரலாகும் வீடியோ
அவரை அடிக்க வேண்டும் என தோன்றியது... ரஹ்மான் குறித்து சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்த ராம் கோபால் வர்மா
‘உருவானது கொசு தொழிற்சாலை’.. டெங்குக்கு எதிராக மக்களை பாதுகாக்க புதிய திட்டம்!!