The Girlfriend: யார் உங்களுக்கானவர்? ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள்ஃபிரண்ட் பட விமர்சனங்கள் இதோ!

The Girlfriend Movie Review:தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து மாறுபட்ட கதைக்களத்தில் நடித்துவருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் மற்றும் நடிகர் தீக்ஷித் ஷெட்டியின் கூட்டணியில் இன்று 2025 நவம்பர் 7ம் தேதியில் வெளியாகியிருக்கும் படம்தான் தி கேர்ள்ஃபிரண்ட். இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சங்கள் குறித்து பார்க்கலாம்.

The Girlfriend: யார் உங்களுக்கானவர்? ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள்ஃபிரண்ட் பட விமர்சனங்கள் இதோ!

ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள்ஃபிரண்ட்

Published: 

07 Nov 2025 13:45 PM

 IST

தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் தொடர்ந்து பிசியாக இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). அந்த வகையில் இவரது நடிப்பில், பெண்ணியம் சார்ந்த கதைக்களத்தில் உருவாகியிருக்கும் படம்தான் தி கேர்ள்ஃபிரண்ட் (The Girlfriend). இந்த படத்தை பிரபல நடிகரும், இயக்குநருமான ராகுல் ரவீந்திரன் (Rahul Ravindran) இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் அனு இம்மானுவேல், ராவ் ரமேஷ், ரோகிணி மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துளள்னர். இந்த படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் இன்று 2025 நவம்பர் 7ம் தேதி முதல் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது.

முன்னதாக இந்தப் படம் தொடர்பான பிரீமியர் காட்சிகள் நவம்பர் 6 ஆம் தேதி இரவு முதல் தொடங்கின. அந்தவகையில், தி கேர்ள்ஃப்ரெண்ட் படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் எக்ஸ் பக்கத்தில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அவர்களின் எக்ஸ் விமர்சனங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : கமல்ஹாசனின் பர்த்டே ஸ்பெஷலாக.. KH237 பட குழுவினர்கள் அறிவிப்பு!

ரஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள்ஃபிரண்ட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் :

இந்த கேர்ள்ஃபிரண்ட் படம் ஒரு நல்ல காதல் கதை, ராஷ்மிகா மீண்டும் தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ளார். இப்படத்தின் இன்டர்வெல் காட்சிகள் பாதுகாப்பற்ற காதல் கதையை மிகச் சிறப்பாகக் காட்டியுள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக கடைசி 10 நிமிடங்களில், ராஷ்மிகா தனது நடிப்பின் திறமையை காட்டியதாக கருத்து தெரிவிக்கின்றனர்.

தி கேர்ள்ஃபிரண்ட் படத்தின் க்ளைமேக்ஸ் எப்படி இருக்கிறது :

நல்ல காதல் கதை, நல்ல நடிப்பு, நல்ல இடைவெளி, எழுத்து மற்றும் இயக்கம் நன்றாக இருப்பதாக ராகுல் ரவீந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார். கடைசி 30 நிமிடங்களில் ராஷ்மிகாவின் நடிப்பு அற்புதமாக இருந்தது.. தீட்சித் ஷெட்டி தனது நடிப்பால் பார்வையாளர்களின் இதயங்களை வென்றார் என்றும் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் எப்போது?.. அட அந்த இடத்தில்தான் நடக்கிறதா? வைரலாகும் தகவல்!

தி கேர்ள்ஃபிரண்ட் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கலாமா:

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பின், பீல் குட் காதல் கதையாக இப்படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பு பரவலாக பேசப்பட்டு வருகிறது. காதல், எமோஷனல் மற்றும் பீல் குட் திரைப்படங்களை பார்க்க நினைப்பவர்கள் இந்த தி கேர்ள்ஃபிரண்ட் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

10வது மாடியில் இருந்து விழுந்த நபர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆச்சரியம்..
60வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான்.. அவரது ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்..
விசா நேர்காணல்களை ரத்து செய்த அமெரிக்கா - இந்தியா கவலை
பாகிஸ்தானில் பணக்கார இந்து பெண்.. யார் இவர்? நிகர மதிப்பு என்ன தெரியுமா?