நடிகர் தனுஷ் உடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு… ராஷ்மிகா மந்தனாவின் நெகிழ்ச்சிப் பதிவு
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் திரையரங்குகளில் தற்போது வெளியாகியுள்ள படம் குபேரா. இந்தப் படத்தில் நாயகியாக நடித்த அனுபவம் குறித்தும் நடிகர்கள் தனுஷ் மற்றும் நாகர்ஜுனா உடன் நடித்தது குறித்தும் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா, தனுஷ்
நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படம் நேற்று 20-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா (Actress Rashmika Mandanna) நாயகியாக நடித்து இருந்தார். இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் குபேரா படக்குழுவினர் உடன் இணைந்து பணியாற்றியது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. அந்தப் பதிவில் நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளதாவது, ”இயக்குநர் சேகர் கம்முலா சார் இயக்கும் ‘குபேரா’ படத்தில் சமீராவாக நான் நடிக்க ஒரு முக்கிய காரணம் ஒரே ஒரு விஷயம்தான். சேகர் கம்முலா உடைய உண்மையான காதல் எப்போதும் அவருடைய படங்களில் பொங்கி வழிகிறது. அதனால்தான் நான் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்பினேன்.
குபேரா படத்தில் சமீராவாக நடித்தது மகிழ்ச்சி:
மேலும் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன், நான் அவரிடம் முழுமையாக சரணடைந்தேன். அதனால் இன்று குபேரா படத்தில் நீங்கள் என்னை சமீராவாக பார்ப்பது எல்லாம் சேகர் கம்முலாவால்தான் என்று தெரிவித்து இருந்தார். நீங்கள் இவ்வளவு அற்புதமான மனிதர்களுடன், அற்புதமான நடிகர்களுடன் பணிபுரியும் போது, உங்களின் நடிப்பை மேம்படுத்துவது ஒரு பெரிய பெரிய பொறுப்பு. மேலும், கொடுக்கப்பட்ட காட்சிகளை நீங்கள் எப்படி கையாழுகிறீர்கள் என்பதிலும் நடிப்பு ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது.
தனுஷ் உடன் நடிக்க கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி உள்ளவளாக இருப்பேன்:
தனுஷ் சார் போன்ற ஒரு சிறந்த நடிகர் உங்களுடம் நடிக்கும் போது வேறு வழியில்லை. நீங்கள் தனுஷ் உடன் திரையைப் பகிர்ந்து கொள்ளும்போது கடினமாக உழைக்க வேண்டும். மேலும் தனுஷ் உடன் குபேரா படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பிற்கு நான் எப்போதும் நன்றி உள்ளவளாக இருப்பேன் என்று தெரிவித்து இருந்தார்.
குபேரா படக்குழு குறித்து ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டா பதிவு:
நாகர்ஜுனா சார் குறித்து, ஒரு நடிகராகவோ அல்லது ஒரு நபராகவோ அவரைக் குறித்து வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. ஆனால் நான் அவரை உண்மையிலேயே நேசிக்கிறேன். பாராட்டுகிறேன்.. அவர் மிகச் சிறந்தவர்.. அவரது வாழ்க்கை முறை மிகவும் சிறப்பு வாய்ந்தது.. அது எனக்கு உத்வேகம் அளிக்கிறது என்றும் ராஷ்மிகா மந்தனா தெரிவித்து இருந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த குபேரா படத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் தனது நன்றியை அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.