இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படங்களின் பட்டியளில் முதலிடத்தைப் பிடித்த ராமாயணா

Ramayana Movie: இந்திய சினிமாவில் பிரமாண்டம் என்பது புதிதான ஒன்று இல்லை. அதிகப் பொருட்ச் செலவில் இந்திய சினிமாவில் வெளியான படங்களில் பட்டியல் ஏராளம் என்று சொல்லலாம். இந்த நிலையில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி வரும் ராமாயணா படம் அந்தப் பட்டியளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படங்களின் பட்டியளில் முதலிடத்தைப் பிடித்த ராமாயணா

ராமாயணா

Published: 

06 Jul 2025 16:17 PM

நடிகர் ரன்பீர் கபூர் (Actor Ranbir Kapoor) ராமராகவும் நடிகை சாய் பல்லவி (Actress Sai Pallavi) சீதையாகவும் நடித்து வரும் படம் ராமாயணா. இந்தப் படத்தை இயக்குநர் நித்தீஸ் திவாரி இயக்கி வருகிறார். படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும் அதில் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்றும் இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ராமாயணா படம் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி பரவி வருகின்றது. அதன்படி படம் இதுவரை இந்திய சினிமாவில் வெளியான படங்களை விட அதிக பட்ஜெட்டில் உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணா:

ராமாயணா படம் இந்திய சினிமாவில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் ரூபாய் 1600 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகின்றது. இதனால் ராமாயணா படம் இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை எடுக்கப்பட்ட மிகவும் பெரிய பட்ஜெட் படங்களாக அமைய உள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி ராமாயணா படத்தின் முதல் பகுதிக்கு மட்டும் சுமார் ரூபாய் 900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ராமாயணா படத்தின் இரண்டாவது அத்தியாயத்திற்கு ரூபாய் 700 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.

ராமாயணா படம் குறித்து நடிகர் யாஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கும் ராமாயணா படம்:

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கும் ராமாயணா படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் கே.ஜி.எஃப் புகழ் நடிகர் யாஷ் ராவணனாக நடிப்பது படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாவது மற்றும் படம் தொடர்பான தகவல்கள் சினிமா வட்டாரங்களில் தொடர்ந்து வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.