TTT படத்தின் 25வது நாள்.. வித்தியாசமான முறையில் கொண்டாடிய தயாரிப்பு நிறுவனம்!
TTT Movie 25th Day Success: தமிழ் சினிமாவில் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில். இப்படமானது வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில், அதை கொண்டாடும் விதத்தில் தயாரிப்பாளார்கள் வேஷ்டி சட்டைகள் மற்றும் பட்டுப்புடவையை வழங்கி கொண்டாடியுள்ளனர்.

தலைவர் தம்பி தலைமையில் பட கொண்டாட்டம்
நடிகர் ஜீவா (Jiiva) தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் கடந்த இலை ஆண்டுகளாக வெளியான படங்கள் பெரிதும் வரவேற்கப்படவில்லை. அந்த விதத்தில் இந்த 2026ம் ஆண்டில் எதிர்பாராத விதமாக வெளியாகி மிக பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் தலைவர் தம்பி தலைமையில் (Thalaivar Thambi Thalamiyil). இப்படத்தில் நடிகர் ஜீவா பஞ்சாயத்து தலைவராக நடித்திருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டிருந்தார். இப்படத்தை மலையாள இயக்குநர் நிதிஷ் சத்யதேவ் (Nithish Sahadev) இயக்கியிருந்த நிலையில், கண்ணன் ரவி குரூப்ஸ் (Kannan Ravi Groups) தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டிருந்தது. அதிரடி அரசியல் காமெடி கதைக்களத்தில் இப்படம் கடந்த 2026 ஜனவரி 15ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்த படமானது வெளியாகி 25வது நாட்களை கடந்துள்ளது. இதை கொண்டாடும் விதத்தில் படக்குழு இதுவரை எந்த தயாரிப்பு நிறுவனமும் செய்யாததை செய்துள்ளது.
அது என்னவென்றால் சென்னை ரோகிணி திரையரங்கில் TTT படத்தின் 25வது நாளை கொண்டாடும் விதத்தில் பலருக்கும் வேஷ்டி சட்டை மற்றும் பட்டுப்புடவையை பரிசாக வழங்கியுள்ளது. இது தொடர்பான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ஓடிடியில் சாதனை படைத்த சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம்.. அப்படி என்ன செய்தது தெரியுமா?
ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படக்குழு வெளியிட்ட பதிவு :
25 days of love, laughter & success ❤️
Sharing our happiness and celebrating this milestone with the people who own it – the public! Every smile, every cheer made this possible.
Grateful to the audience who made it special⭐️
🎟️ https://t.co/FiidQGRVOg#TTTPongal pic.twitter.com/8309snKpf3
— KANNAN RAVI GROUPS (@KRGOffl) February 8, 2026
இந்த தயாரிப்பு நிறுவனம் செய்த செயலை தற்போது பலரும் பாராட்டிவருகின்றனர். எந்த ஒரு படக்குழுவும் படத்தின் கொண்டாட்டத்தை இவ்வாறு மக்களுடன் இணைந்து கொண்டாடியதில்லை என்றும் இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது.
ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் பட ஓடிடி ரிலீஸ் :
நடிகர் ஜீவாவின் இந்த படத்தில் அவருடன் நடிகர்கள் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன், சாய் விக்னேஷ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தய் மலையாள இயக்குநர் நிதிஷ் சத்யதேவ் இயக்கியிருந்த நிலையில் விஷ்ணு விஜய் இசையமைத்திருந்தார். இந்த படம் முதலில் 2026 ஜனவரி 30ம் தேதியில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்த நிலையில், ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட காரணத்தினாலே 2026 ஜனவரி 15ம் தேதியில் ரிலீஸ் செய்யவதாக திடீரென அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படமானது ரிலீசிற்கு முன் எந்த ப்ரோமோஷனும் இல்லாத போதிலும், வெளியான முதல் நாளிலே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதையும் படிங்க: ஜன நாயகன் பட சென்சார் விவகாரம் – வழக்கை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி!
இப்படத்துட பராசக்தி மற்றும் வா வாத்தியார் போன்ற படங்கள் வெளியாகியிருந்த நிலையில், அதிக ஒப்பிடும்போது இப்படத்திற்கு ரசிகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்திருந்தது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில், வரும் 2026 பிப்ரவரி 12ம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.