Vaadivaasal : சூர்யாவின் வாடிவாசல்.. மதுரையில் தொடங்கும் பிரம்மாண்ட ஷூட்டிங் எப்போது தெரியுமா?

Vaadivaasal Shooting Update : தமிழ் சினிமாவில் கொண்டாடும் நடிகராக இருப்பவர் சூர்யா. இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டில் இவரின் நடிப்பில் அறிவிக்கப்பட்டிருந்த படம் வாடிவாசல். இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாக்கவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் மதுரையில் தொடங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Vaadivaasal  : சூர்யாவின் வாடிவாசல்.. மதுரையில் தொடங்கும் பிரம்மாண்ட ஷூட்டிங் எப்போது தெரியுமா?

சூர்யா வாடிவாசல் திரைப்படம்

Updated On: 

15 May 2025 19:28 PM

 IST

நடிகர் சூர்யாவிற்கு (Suriya)  தென்னிந்திய அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ரெட்ரோ (Retro). இந்த படமானது கடந்த 2025, மே 1ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியானது. இதை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி, சூர்யாவுடன் இணைந்து தயாரித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே (Pooja Hegde)  இணைந்து நடித்திருந்தார். இதை அடுத்து , இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) சூர்யா45  (Suriya 45)படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது கிராமத்துக் கதைக்களத்துடன் மாஸாக உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழில் வெற்றிமாறனுடன் (Vetrimaaran) வாடிவாசல்  (Vaadivaasal) என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை பற்றிய அறிவிப்புகளானது கடந்த 2022ம் ஆண்டிலே வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து இந்த படமானது எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பானது மக்களிடையே அதிகம் எழும்பி வந்தது.

இதை தொடர்ந்து முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, இந்த படத்தின் ஷூட்டிங் 2025 ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளதாகக் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவர் கொடுத்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தடை ஏற்படுத்தியுள்ளது.

வாடிவாசல் ஷூட்டிங் மதுரையில் தொடங்குகிறதா ?

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, அதில் “சூர்யாவின் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் மற்றும் படப்பிடிப்பு தளம் தொடர்பான விஷயங்கள் பேச்சுவார்த்தையில் இருந்து வருகிறது, மேலும் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் செட்டும் மதுரையில் போடப்படவுள்ளது, மேலும் நடிகர்கள் தங்குவதற்கு ஏதுவான இடமும் பார்க்கப்பட்டு வருகிறதாகத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவலானது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிமாறன் மற்றும் சூர்யாவின் கூட்டணியில் :

இயக்குநர் வெற்றி மாறனின் இயக்கத்தில் இறுதியாக விடுதலை 2 படமானது வெளியாகியது. இந்த படமானது ஓரளவு வரவேற்பைப் பெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து தற்போது வாடிவாசல் படத்தை இயக்கும் பணியில் இறங்கியுள்ளார். இந்த படத்தை இவர் கடந்த 2022ம் ஆண்டிலேயே அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் 2 வருடங்களுக்குப் பின் வரும் 2025, ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. நடிகர் சூர்யா இதில் ஜல்லிக்கட்டு வீரனாக நடிக்கவுள்ளார். வெற்றிமாறன் மற்றும் சூர்யாவின் கூட்டணியில் உருவாக்கவுள்ள முதல் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
Related Stories
Sivakarthikeyan: அமரன் பட கிளைமேக்ஸை என் மனைவி பார்க்கவில்லை.. எனது மகள் கட்டியணைத்து அழுதார் – சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!
மின்னல் முரளி 2 எடுப்பது குறித்து இப்போதைக்கு ஐடியா இல்லை – பேசில் ஜோசப்
கமல் ஹாசனின் சூப்பர் ஹிட் படம் மூன்றாம் பிறை மறுசீரமைக்கப்பட்டு ஓடிடியில் வெளியாக உள்ளது
Chiyaan Vikram: பிரச்சனைகள் ஓவர்.. விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
ரசிகர்களே தயாரா? ஸ்பாட்டிற்கு சென்று ஆய்வு செய்யும் அஜித் குமார் – வைரலாகும் வீடியோ!
23 ஆண்டுகளாகத் தொடர்ந்து உச்சத்தில் நீடிப்பது ஒரு நம்பமுடியாத சாதனை – த்ரிஷா குறித்து புகழ்ந்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..