ரிலீஸ் தேதியை உறுதி செய்த பராசக்தி படக்குழு… உற்சாகத்தில் ரசிகர்கள்

Parasakthi Movie Release Update : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பராசக்தி. பீரியட் ட்ராமாவாக உருவாகி உள்ள இந்த பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு தற்போது மாற்றியுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸ் தேதியை உறுதி செய்த பராசக்தி படக்குழு... உற்சாகத்தில் ரசிகர்கள்

பராசக்தி

Published: 

22 Dec 2025 20:27 PM

 IST

தமிழ் சினிமாவில் வரும் 2026-ம் ஆண்டில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் வருகின்ற ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டில் மட்டும் கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக உள்ள விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்கள் வெளியாக காத்திருக்கின்றது. இதில் தளபதி விஜய் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் படங்களில் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு படம் ஜனவரி 26-ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படம் வருகின்ற 09-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் இருப்பதால் இந்தப் படத்துடன் வேறு எந்தப் படகும் போட்டியாக வெளியாகாது என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில் ஜனவரி மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி உள்ள நிலையில் முன்னணி நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ரிலீஸ் தேதியை உறுதி செய்த பராசக்தி படக்குழு:

இந்த நிலையில் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியை முன்னதாகவே படக்குழு மாற்றி உள்ளதாக சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸை 14-ம் தேதியில் இருந்து 10-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டிற்கு பராசக்தி படக்குழு மாற்றியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

Also Read… Maari 2: வானம் பொழியமா பூமி விளையுமா கூறு.. 7 வருடத்தை நிறைவு செய்த தனுஷ்- சாய் பல்லவியின் மாரி 2 திரைப்படம்!

பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Year Ender: 2025ல் திருமணம் செய்துகொண்ட தமிழ் பிரபலங்கள் யார் யார்?

அமெரிக்க வெளியிட்ட வரைபடத்தில் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
ஆபரேஷன் சிந்தூரின் போது தாக்கப்பட்ட விமான படைத்தளங்களை சீரமைக்கும் பாகிஸ்தான்
ஆவேசம் 2 படம் ரிலீஸ் எப்போது? நடிகர் ஃபஹத் ஃபாசில் கொடுத்த அப்டேட்
ஒரு சக்தி என் உடலுக்குள் நுழைந்தது.. நடிகை சுதா சந்திரன் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்