Pa. Ranjith: அனைவரையும் உலுக்கிய பேரிழப்பு.. ஸ்டண்ட் மாஸ்டர் மறைவுக்கு பா.ரஞ்சித் இரங்கல்!

Pa. Ranjith Condoles : இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் படம் வேட்டுவம். இப்படத்தின் படப்பிடிப்பின்போது கடந்த 2025, ஜூலை 13ம் தேதியில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ், கார் கிராஷ் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் இறப்பிற்கு, இயக்குநர் பா. ரஞ்சித் இரங்கல் மற்றும் விளக்கம் தெரிவித்துப் பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவானது வைரலாகி வருகிறது.

Pa. Ranjith: அனைவரையும் உலுக்கிய பேரிழப்பு.. ஸ்டண்ட் மாஸ்டர் மறைவுக்கு பா.ரஞ்சித் இரங்கல்!

பா ரஞ்சித் இரங்கல்

Published: 

15 Jul 2025 17:04 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் பா. ரஞ்சித் (Pa.Ranjith). இவரின் இயக்கத்தில் இறுதியாக தங்கலான் (Thangalaan) திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை அடுத்தாக நடிகர் ஆர்யா (Arya), அட்டக்கத்தி தினேஷ் (Dinesh) மற்றும் அசோக் செல்வன் இணைந்த நடித்துவரும் படம் வேட்டுவம். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நாகை மாவட்டம் (Nagapattinam District) சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2025, ஜூலை 13ம் தேதியில் நடந்த ஷூட்டிங்கில் கார் கிராஷ் காட்சிகள் (Car crash) படமாக்கப்பட்டு வந்தது. இந்த காட்சியின் போது கோர விபத்து நடந்திருந்தது. கார் கிராஷ் காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் (stunt master Mohanraj) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த படத்தில் கார் காட்சியின்போது,கார் கீழே கவிழும் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. அப்போது அந்த காரினுள் இருந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் என்பவர் விபத்தின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.

இந்த செய்தியானது ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவையும் திரும்பிப் பார்க்கவைத்தது என்றே கூறலாம். இதன் காரணமாக இயக்குநர் பா. ரஞ்சித் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இது போன்ற அசம்பாவிதங்கள் இனிமேல் நடக்கக்கூடாது எனவும், பல்வேறு விதிமுறைகளை சினிமா துறையினர் கொண்டுவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், மறைந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த பதிவானது தற்போது மக்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க : நான் ஜீனியஸ் இல்ல… சஞ்சய் தத் கருத்துக்கு லோகேஷ் கனகராஜ் பதிலடி!

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட இரங்கல் பதிவு :

இந்தப் பதிவில் இயக்குநர் பா. ரஞ்சித் உருக்கமாகப் பேசியுள்ளார். அதில் அவர், “எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். அவரின் குடும்பம், மனைவி, குழந்தைகள், நண்பர்கள் மற்றும் இணை பணியாளர்கள் அனைவரையும் நினைக்கும்போது உள்ளம் கலங்குகிறது என்றும் கூறியிருக்கிறார். மேலும் கார் கிராஷிற்கு முன் நடந்தது பற்றியும் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : வேட்டுவம் பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி.. உருக்கமாக பதிவிட்ட மாரி செல்வராஜ்

கார் கிராஷ் குறித்து பா. ரஞ்சித் விளக்கம் :

அதில் அவர், “எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு, செய்யும் தெளிவான திட்டம், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எங்களின் வேண்டுதல்கள் என எல்லாம் இருந்தது. மேலும் சண்டைக்காட்சிகளைத் திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த திட்டமிட்ட கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், மேலும் ஸ்டண்ட் இயக்குநர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் நாங்கள் மதித்தோம். அதையும் தவறாமல் பின்பற்றினோம். ஆனால் அந்த நாளில், அண்ணன் மோகன் ராஜ் உயிரிழப்பில் முடிந்தது என அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். இது தொடர்பான பதிவு தற்போது வைரலாகி வருகிறது.