ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் சீரிஸ் ரசிகர்களால் முடங்கிய நெட்ஃபிளிக்ஸ்… என்ன நடந்தது?
Stranger Things series Season 5: ஓடிடியில் வெளியாகும் இணையதள தொடர்களுக்கு ரசிகர்கள் பலர் உலக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உலக அளவில் மக்களால் அதிகம் வரவேற்பைப் பெற்ற ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் என்ற இணையதள தொடர் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிமகாக இருப்பது போல ஓடிடியில் தொடர்ந்து பல சீரிஸ்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அந்த அந்த மொழிக்கு ஏற்ப அதன் மக்களை கவரும் விதமாக் இருக்கும். ஆனால் ஓடிடியில் ஒளிபரப்பாகும் இணையதள தொடர்கள் உலக மக்கள் அனைவரும் விரும்பும் விதமாக எடுக்கப்படுகின்றது. அதன்படி உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஓடிடி நிறுவனங்கள் சார்பாக வெளியாகும் இணையதள தொடர்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி ஓடிடியில் வெளியாகும் இணையதள தொடர்கள் மொழி பேதம் இன்றி உலகில் உள்ள சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் தற்போது வெளியாகியுள்ளது ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் தொடரின் 5-வது சீசன்.
இந்த ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் இணையதள தொடரின் முதல் சீசன் கடந்த 2016-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் 2017-ம் ஆண்டு மூன்றாவது சீசன் 2019-ம் ஆண்டும் 2022-ம் ஆண்டு 4-வது சீசனும் ஒளிபரப்பானது. ஆங்கில மொழியில் உருவான இந்த இணையதள தொடருக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த இணையதள தொடரின் 5-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி உள்ளது.
ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் சீரிஸ் ரசிகர்களால் முடங்கிய நெட்ஃபிளிக்ஸ்:
இந்த ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரின் 5-வது சீசனை ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அது தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது. அதன்படி இந்த தொடர் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான உடனே உலக அளவில் உள்ள பலகோடி ரசிகர்கள் ஒரே நேரத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் பார்த்ததால் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் சிறிது நேரம் முடங்கியது.
Also Read… விஜய் ஆண்டனி எழுதி, இசையமைத்து, பாடிய மனசு வலிக்குது பாடல் வெளியானது
இந்த தொடரின் எபிசோடுகளை பார்க்க முயன்ற ரசிகர்கள் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் லோடிங் மற்றும் லாகின் பிரச்சனையை எதிர்கொண்டனர். இதனால் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியின் சேவை உலக அளவில் பாதிக்கப்பட்டாலும் அடுத்த 5 நிமிடத்திலேயே நிறுவனம் அந்த பிரச்னையை சரி செய்தது குறிப்பிடத்தக்கது.
Also Read… ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் வில்லனாக களமிறங்கும் பிரபல நடிகர் – வைரலாகும் தகவல்