பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்திற்கு இசையமைக்கும் பணியை தொடங்கிய சாய் அபயங்கர்

Music Director Sai Abhyankkar: தமிழ் சினிமாவில் ஆல்பம் பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பாடகரும் இசையமைப்பாளருமான சாய் பயங்கர். இவர் பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணியின் மகன் ஆவார். இசைக் குடும்பத்தில் இருந்து வந்த இவர் தற்போது படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகளை தொடர்ந்து பெற்று வருகிறார்.

பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்திற்கு இசையமைக்கும் பணியை தொடங்கிய சாய் அபயங்கர்

சாய் அபயங்கர்

Published: 

26 May 2025 15:28 PM

 IST

தமிழ் சினிமாவில் 90-களில் இருந்து கொடி கட்டிப் பறந்த பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி. இவர்கள் பாடிய பாடல்கள் பல சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்த நிலையில் இவர்களின் வாரிசாக அடுத்து இசை உலகில் அடி எடுத்து வைத்துள்ளார் இவர்களின் மகன் சாய் அபயங்கர் (Sai Abhayankar). கடந்த 2023-ம் ஆண்டு முதல் தமிழில் ஆல்பம் பாடல்களை தானே இசையமைத்து பாடி வருகிறார் சாய் அபயங்கர். இதில் கடந்த 2024-ம் ஆண்டு இவர் இசையமைத்து பாடிய கட்சி சேர என்ற ஆல்பம் பாடல் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் ஆனது. இந்தப் பாடல் வெளியானது இணையத்தில் பேசுபொருள் ஆனார் சாய் அபயங்கர். தமிழ் சினிமாவின் அடுத்த அனிருத் என்றும் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர்.

இந்தப் பாடலை தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்டே ஆச கூட என்ற பாடலையும் இசையமைத்து பாடியிருந்தார் சாய் அபயங்கர். இந்தப் பாடலும் கட்சி சேர பாடலைப் போல ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்படி ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்த சாய் அபயங்கருக்கு தமிழ் சினிமாவில் இசையமைக்கும் வாய்ப்பை வாரிக் கொடுக்க ஆரம்பித்தது கோலிவுட் சினிமா.

தமிழ் சினிமாவில் குவியும் முன்னணி நடிகர்களின் படங்கள்:

இந்த ஆல்பம் பாடல்களே சாய் அபயங்கரின் ஒட்டுமொத்த திறமையையும் காட்டிவிட்டது என்று தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அவரை இசையமைக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது சாய் அபயங்கர் தற்போது பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்திற்கும், சூரியாவின் 45-வது படத்திற்கும், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் பென்ஸ் படத்திற்கும், சிம்புவின் 49-வது படத்திற்கு இசையமைக்க உள்ளதாக அப்டேட்கள் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்த படங்களை எல்லாம் விட பெரிய பட்ஜெட் படமான அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு சாய் அபயங்கர்தான் இசையமைக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

டியூட் படத்திற்கு இசைப் பணியை தொடங்கிய சாய் அபயங்கர்:

இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் படம் டியூட். இந்தப் படத்தில் பிரபல நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக படத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இயக்குநர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இந்த நிலையில் இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்திற்கு இசையமைக்கும் பணியை இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தொடங்கி விட்டதாக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Related Stories
Arasan: அரசனின் எழுச்சி.. அரசன் புரோமோவின் BTS வீடியோவை வெளியிட்ட சிலம்பரசன்!
பராசக்தி ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர்கள் கூறுவார்கள் – இயக்குநர் சுதா கொங்கரா
Jana Nayagan: அரசியல் நிகழ்ச்சியல்ல தளபதி திருவிழா இசைவெளியீட்டு விழா.. அதிரடி எச்சரிக்கை கொடுத்த மலேசிய போலீஸ்!
இளையராஜா – ஏ.ஆர். ரஹ்மானுக்கு அடுத்து ஜிவி. பிரகாஷ்தான்.. புகழ்ந்து தள்ளிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.!
Kiara Advani: யாஷின் டாக்சிக் படத்தில் இணைந்த கியாரா அத்வானி.. வெளியானது கேரக்டர் அறிமுக போஸ்டர்!
ஒரு கனவுடன் தொடங்கிய பயணம் பல இதயங்களில் இடம் பிடித்தது – திரையரங்குகளில் வெளியாகி 7 ஆண்டுகளைக் கடந்தது கனா படம்
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்... அவருக்கு உடலில் இப்படி ஒரு பிரச்சனையா?
ஹிமாச்சலின் வறண்ட டிசம்பர்.. வெப்பமயமாதலால் பனி இல்லாத நிலை!
ஜிபிஎஸ் டிராக்கருடன் கிடைத்த வெளிநாட்டு கடற்புறா - பரபரப்பு தகவல்
ஏஐ காதலரை திருமணம் செய்துகொண்ட ஜப்பானிய பெண்