Parasakthi: பராசக்தி கதை திருட்டு கதையா? சிவகார்த்திகேயனுக்கு வந்த சிக்கல்.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Parasakthi Movie Story Theft Case: சிவகார்த்திகேயன், நடிப்பில் 25வது திரைப்படமாக தயாராகியிருப்பதுதான் பராசக்தி. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியில் வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் மீதான புகாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது.

பராசக்தி
நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) 25வது திரைப்படமாக தயாராகியுள்ள படம் தான் பராசக்தி (Parasakthi) திரைப்படம். இந்த படத்தை பிரபல இயக்குநரான சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் சூர்யா (Suriya), மாதவன் போன்ற நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். அந்த வரிசையில் இவர் சிவகார்த்திகேயனை கொண்டு இயக்கிய படம்தான் பராசக்தி. இப்படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் (Aakash Bhaskaran) டான் பிக்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். இவரின் தயாரிப்பில் பல படங்கள் உருவாகிவருகிறது . அந்த வகையில் இந்த பராசக்தி படமானது கடந்த 1960ல் நடந்த இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுடன், ஸ்ரீலீலா (Sreeleela), அதர்வா மற்றும் ரவிமோகன் உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இப்படத்திற்கு புது சிக்கல் வந்துள்ளது. இந்த படத்தின் கதை செம்மொழி என்ற கதையை திருடி எடுக்கப்பட்டதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் (Chennai High Court) ராஜேந்திரன் என்பவர் புகார் அளித்துள்ளார். இதன் காரணமாக உயர்நீ திமன்றம் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: எங்க அண்ணனுக்கு நாங்க தான் செய்வோம்… தளபதி விஜய்க்காக மலேசியாவில் ஒன்றுகூடிய தமிழ் சினிமா பிரபலங்கள்!
பராசக்தி படத்திற்கு படத்தின் மீதான கதை திருட்டு வழக்கு :
சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திரன் என்பவர் இந்த பராசக்தி படமானது. தனது செம்மொழி என்ற திரைப்படத்தின் கதையை திருடி எடுத்ததாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்த நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதியில் அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: பராசக்தி படத்தில் அந்த பிரபல ஹீரோதான் நடிக்க வேண்டியது… இயக்குநர் சுதா கொங்கரா ஓபன் டாக்
இந்த தகவலானது தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது போன்று இப்படத்தின் ரிலீஸ் தேதியில் ஒத்திவைக்கப்படுமா? என குழப்பத்தில் உள்ளனர்.
கண்காட்சி குறித்து பராசக்தி படக்குழு வெளியிட்ட பதிவு :
The excitement is only getting bigger 🔥
Phenomenal energy and overwhelming turnout for #WorldOfParasakthi at Valluvar Kottam
Open for audiences till December 28 🗓️
Venue:- Valluvar Kottam
Time:- 12PM – 10 PM#ParasakthiFromPongal#ParasakthiFromJan10@siva_kartikeyan… pic.twitter.com/r78rdgWOWR— DawnPictures (@DawnPicturesOff) December 25, 2025
பராசக்தி படத்தின் ப்ரோமோஷன் கண்காட்சி போன்று தற்போது சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த கண்காட்சி 2025ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி முதல் தொடங்கி டிசம்பர் 28ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.