ஜெய் பீம் படம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகை லிஜோமோல் ஜோஸ்!

Actress Lijomol Jose: மலையாள சினிமாவில் நடிகையாக லிஜோமோல் ஜோஸ் அறிமுகம் ஆகி இருந்தாலும் இவர் மலையாளம் மற்றும் தமிழ் என தொடர்ந்து மாறிமாறி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் முன்னதாக தமிழில் இவர் நடித்த ஜெய் பீம் படம் குறித்து லிஜோமோல் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

ஜெய் பீம் படம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகை லிஜோமோல் ஜோஸ்!

லிஜோமோல் ஜோஸ்

Published: 

08 Jul 2025 16:25 PM

நடிகை லிஜோமோல் ஜோஸ் (Actress Lijomol Jose) தொடர்ந்து அழுத்தமான கதைகளில் நடிப்பதன் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளார். இவர் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பலப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை லிஜோமோல் ஜோஸ் தற்போது தமிழில் ஃப்ரீடம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் வருகின்ற 10-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் சத்ய சிவா எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் (Actor Sasikumar) நாயகனாக நடித்துள்ளார். இலங்கையில் இருந்து தப்பி வந்த தமிழர்கள் எவ்வாறு அடக்குமுறைக்கு ஆளானார்கள் என்பதை அடிப்படையாக கொண்டு உருவான இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது.

இந்த நிலையில் நடிகை லிஜோமோல் ஜோஸ் சமீபத்தில் விகடன் நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டி ஒன்றில் முன்னதாக தமிழில் நடித்த ஜெய் பீம் படம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் லிஜோமோல் ஜோஸிடம் எந்த கதாப்பாத்திரம் உங்கள் வாழ்க்கையை மாற்றியது என்ற கேள்விக்கு நடிகை லிஜோமோல் ஜோஸ் ஜெய் பீம் படத்தில் நடித்த செங்கேனி என்ற கதாப்பாத்திரம் என வெளிப்படையாக பேசியுள்ளார்.

Also read… விஜய் மாதிரி மற்ற ஹீரோக்கள் வேலை செய்தால்… புகழ்ந்து பேசிய தயாரிப்பாளர் தில் ராஜு

ஃப்ரீடம் படம் குறித்து நடிகை லிஜோமோல் ஜோஸின் இன்ஸ்டாகிராம் பதிவு:

Also read… லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? இயக்குநர் வெங்கி அட்லூரி கொடுத்த அப்டேட்

தமிழ் சினிமாவில் நடிகை லிஜோமோல் அறிமுகம் ஆன படம்:

இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் லிஜோமோல் ஜோஸ். இந்தப் படத்தில் இவர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு அக்காவாக நடித்து இருந்தார். தமிழில் அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் நடிகை லிஜோமோல் ஜோஸ்.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் வெளியான தீதும் நன்றும், ஜெய் பீம், காதல் என்பது பொதுவுடமை, ஜெண்டில்வுமன் என அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.