கார்த்தி முதல் பிரதீப் ரங்கநாதன் வரை.. தமிழில் இளம் நடிகையாக கலக்கும் இந்த சிறுமி யாருனு தெரியுமா?
Tamil Actress Childhood Photo : சினிமாவை பொறுத்தவரையில் உச்ச நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் இருந்துவருகின்றனர். அவர்களின் குழந்தை பருவப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருவது வழக்கமே. அந்த விதத்தில் இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி எந்த பிரபல நடிகைனு தெரியுமா.

தமிழ் பிறபல நடிகையின் சிறுவயது புகைப்படம்
தென்னிந்திய சினிமாவை பொறுத்த வரையில் நடிகைகள், தங்களின் மொழி படங்களைக் கடந்து, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் நடித்துவருகின்றனர். அந்த விதத்தில் அவர்களின் அடையாளம் தெரியாத சிறுவயது மற்றும் குழந்தைப் பருவ புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகிவருவது உண்டு. அந்த விதத்தில் மேலே புகைப்படத்தில் உள்ள சிறுமி எந்த நடிகைனு தெரியுமா?. இவர் தனது 17வது வயதில், தெலுங்கு சினிமாவின் (Telugu Cinema) மூலம் கதாநாயகியாக சினிமாவில் நுழைந்தார். தனது முதல் படத்திலே ஹீரோவுடன் நெருக்கமான காட்சியில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் முதல் படத்தை ராம் சரணின் (Ram Charan) பெடி (Peddi) திரைப்படத்தை இயக்கிவரும் இயக்குநர் புச்சி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இவரின் தமிழ் அறிமுக படத்தில் கார்த்திக்கு (karthi) ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமானது இவர்க்கு தோல்வியை கொடுத்திருந்தது என்றே கூறலாம். மேலும் பிரதீப் ரங்கநாதனுடன் (Pradeep Ranganathan) புது படத்தில் நடித்திருக்கிறார். இப்போது இந்த நடிகை யார் என தெரிந்திருக்கும். இந்த சிறுமி வேறுயாருமில்லை, நடிகை க்ரித்தி ஷெட்டி தான் (Krithi Shetty).
இதையும் படிங்க: முதல் காதலை தேடி பயணம்.. அபிஷன் ஜீவிந்தின் ‘வித் லவ்’ படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!
நடிகை க்ரித்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
நடிகை க்ரித்தி ஷெட்டி, கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதியில் கர்நாடகாவில் பிறந்தார். இவர் ஆரம்பத்திலிருந்தே சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட நிலையில், இவர் 2019ம் ஆண்டில் இந்தியில் வெளியான “சூப்பர் 30” என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். பின் இவர் கதாநாயகியாக 2021ம் ஆண்டில் வெளியான “உப்பென” என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். இப்படத்தில் நடிக்கும்போது இவருக்கு 17 வயதுதான். இந்த படத்தில் நடிகர் பஞ்சா வைஷ்ணவ் தேஜ் என்பவருக்கு ஜோடியாக, நெருக்கமான காட்சிகளில் நடித்து பிரபலமானார். இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்த இவர், இரண்டாவது படத்திலே நானிக்கு ஜோடியாக ஷியாம் சிங்கா ராய் படத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: ‘எனக்கு சினிமாவில் அவரின் டான்ஸ் ரொம்பவே பிடிக்கும்’- சாய் பல்லவி சொன்ன நடிகர் யார் தெரியுமா?
தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவில் நாயகியாக நடித்த நிலையில், இவருக்கு பல படங்கள் தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து மலையாளம் சினிமாவில் ARM என்ற படத்தில் நடித்திருந்தார். இது இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. அந்த விதத்தில் இவருக்கு தமிழில் அறிமுக படமாக அமைந்தது வா வாத்தியார். இதில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். ஆனால் இப்படம் பெரிதும் வரவேற்கப்படவில்லை. இப்படத்தை அடுத்ததாக LIK மற்றும் ஜீனி போன்ற தமிழ் படங்கள் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.