லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் கதை இப்படித்தான்.. விக்னேஷ் சிவன் சார் நிறைய கஷ்டப்பட்டிருக்காரு- கீர்த்தி ஷெட்டி!

Krithi Shetty About LIK: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகையாக இருந்துவருபவர் கீர்த்தி ஷெட்டி. இவரின் நடிப்பில் தமிழில் கிட்டத்தட்ட 3 படங்கள் தயாராகியுள்ள நிலையில், விரைவில் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகை நேர்காணலில் பேசிய கீர்த்தி ஷெட்டி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் கதை குறித்து மனம் திறந்துள்ளார்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் கதை இப்படித்தான்.. விக்னேஷ் சிவன் சார் நிறைய கஷ்டப்பட்டிருக்காரு- கீர்த்தி ஷெட்டி!

கீர்த்தி ஷெட்டி மற்றும் பிரதீப் ரங்கநாதன்

Published: 

25 Nov 2025 16:33 PM

 IST

கன்னட சினிமாவின் மூலம் தனது 17வது வயதிலே ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி (Krithi Shetty). இவர் தனது முதல் திரைப்படத்தின் மூலமாகவே மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தி அடுத்தாக தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடிக்க தொடங்கியிருந்தார். அந்த வகையில் இவருக்கு தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களும் அதிகரிக்க தொடங்கியிருந்தனர். அதை தொடர்ந்து கிட்டத்தட்ட தமிழில் தொடர்ந்து 3 திரைப்படங்களில் கமிட்டாகியிருந்தார். இந்த 3 திரைப்படங்களின் ஷூட்டிங் முடிந்திருந்தாலும் இன்னும் வெளியாகவில்லை. இவர் தமிழில் கார்த்தி (Karthi), பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) மற்றும் ரவி மோகன் (Ravi Mohan) போன்ற பிரபலங்களுடன் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கிய படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள நிலையில் 2025 டிசம்பர் 18ம் தேதியில் வெளியாகிறது . இந்த மேலும் சமீபத்தில் பத்திரிகை நேர்காணலில் பேசிய கீர்த்தி ஷெட்டி, லவ் இன்சூரஸ் கம்பெனி படம் கதை குறித்து மனம் திறந்துள்ளார்.

இதையும் படிங்க: வந்தான்.. சுட்டான்.. செத்தான்.. ரிப்பீட்டு.. 4 ஆண்டுகளைக் கடந்தது சிம்புவின் மாநாடு படம் – இயக்குநர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை கீர்த்தி ஷெட்டி:

சமீபத்தில் நேர்காணலில் பேசிய கீர்த்தி ஷெட்டி, அதில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், “இந்த LIK படமானது ஒரு அறிவியல் புனைகதை மற்றும் காதல் காமெடி கதையில் கலவையாக உருவாகியுள்ளது. இப்படம் 2040ம் ஆண்டில் நடக்கும் எதிர்கால கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: அரசன் படத்தில் சிலம்பரசனுடன் இணைந்த விஜய் சேதுபதி – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இந்த படத்தின் கதை எதிர்காலத்தில் நடக்கும் நிலையில், இந்த காலத்திலிருந்து வித்தியாசமான ஸ்டோரி லைனில் உருவாகியுள்ளது. இப்படம் எதிர்கால கதை என்பதால பல கற்பனையான விஷயங்களும் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த கதையை சிறப்பாக செய்ய விக்னேஷ் சிவன் சார் மிகவும் கடுமையாக முயற்சித்துள்ளார்” என்று ஆதில் அவர் தெரிவித்துள்ளார்.

லவ் இன்சூரன்ஸ் படத்தின் 2வது பாடல் ரிலீஸ் குறித்து நயன்தாரா வெளியிட்ட பதிவு :

இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டியுடன், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, கௌரி ஜி கிஷன் உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2025 டிசம்பர் 18ம் தேதியில் வெளியாகின்ற நிலையில், விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories
இந்திய கிரிக்கெட் வீராங்கனை வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான ஷாபாஷ் மித்து – எந்த ஓடிடியில் பார்க்கலாம்
ஸ்கூல் யூனிஃபார்மில் இருக்கும் இந்த சிறுமி இப்போ ஸ்டார் நடிகை… யார் தெரியுமா?
Krithi Shetty: பிரதீப் ரங்கநாதன் கூட இருந்தாலே பாசிட்டிவ் வைப்தான் – கீர்த்தி ஷெட்டி ஓபன் டாக்!
Krithi Shetty: நான் கார்த்தி சாரின் மிகப்பெரிய ரசிகை.. அந்த படத்தை பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன் – கீர்த்தி ஷெட்டி!
உனக்கென மட்டும் வாழும் இதயமடி… 14 ஆண்டுகளை நிறைவு செய்தது மயக்கம் என்ன படம்
மகாநதி படத்திற்கு பின் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.. 6 மாதம் சும்மாதான் இருந்தேன்- கீர்த்தி சுரேஷ்பேச்சு!
பெங்களூரு ஏ.டி.எம் கொள்ளை சம்பவம்.. வெளியான திடுக் தகவல்..
கோல்ஃப் உலகையே ஆச்சரியப்பட வைத்த பெண்ணின் வெற்றி - அப்படி என்ன நடந்தது?
பெண்கள் பெண்களை காக்கும் அதிசய சக்தி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் ரஷ்மிகா மந்தனா!
துபாய் ஏர்ஷோவில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானம்.. காரணத்தை சொன்ன நிபுணர்கள்..